அரச கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கான ஆசிரியர் நியமனம் பெற்ற யாழ். குடாநாட்டு பட்டதாரிகள் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் தங்களால் பணி செய்வதற்குச் செல்ல இயலாதுள்ள நிலைமை மற்றும் ஏனைய இடையூறுகள் குறித்து இங்கு எடுத்துக் கூறப்பட்டது.
மேற்படி, ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாகாண பிரதான செயலாளர் மற்றும் கல்விச் செயலாளர் ஆகியோருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடியதற்கு இணங்க இப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு யாழ். குடாநாட்டில் தற்காலிக ஆசிரிய நியமனங்களை வழங்குவதற்கும் இவர்களுக்கான ஊதியங்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.