இனவாதிகளின் கும்மாளத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் தமிழ் இனத்திற்கு எதிராக இந்திய அரசின் பச்சைத் துரோகமே முதன்மையான காரணமாகும் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
கிளிநொச்சியை இலங்கைப்படை கைப்பற்றிவிட்டதென ராஜபக்ஷவும் தமிழின துரோகக் கும்பலும் கும்மாளம் அடிக்கின்றனர். ஆறேழு நாடுகளின் படைத் துணையோடு ஆறேழு மாதங்களாக பெரும்பாடுபட்டு தற்போது புலிகள் பின்வாங்கிய நிலையில், ஆயிரக்கணக்கான சிங்கள வீரர்களை பலிக்கொடுத்தும் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தும் கிளிநொச்சியை கைப்பற்றியுள்ளோம் என்று கொக்கரிக்கின்றனர். இந்த நிகழ்வால் புலிகள் வீழ்ந்து விட்டதாகவும், போர் ஓய்ந்துவிட்டதாகவும் கருதிவிட முடியாது.
படையினரை விரட்டி பல பகுதிகளை கைப்பற்றுவதும் , பின்னர் கைவிடுவதும் புலிகளின் வரலாற்றில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளே. ஆகவே, பின்வாங்கல் என்பது பின்னடைவு ஆகாது. இனவாதிகளின் இந்தக் கும்மாளத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் தமிழ் இனத்திற்கு எதிராக இந்திய அரசின் பச்சைத் துரோகமே முதன்மையானதாகும். விடுதலைப் புலிகளோடு தனியாக மோத வக்கில்லாத இங்கை அரசு இந்திய அரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணையோடு ஒற்றையாய் எதிர்த்து நிற்கும் விடுதலைப்புலிகளை பின்வாங்கச் செய்திருப்பது பெரிய வெற்றியாகாது. தாம் எதிர்பாத்தது நடந்துவிட்டதெனவும், தமது கனவு பலித்துவிட்டதெனவும் இந்திய அரசும் மகிழ்ச்சியடையலாம்.
பத்துக்கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களவர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப் போக்கை எந்தக் காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது. தமிழ் இனத்தின் முதுபெரும் தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி அவர்களின் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் இந்திய தலைமை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முறையிட்டு ஒருமாத காலம் உருண்டோடிவிட்டது.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் விரைவில் கொழும்பு சென்று அதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என உறுதியளித்தும் கூட இது வரையில் அதற்கான முனைப்பு ஏதுமில்லை என்பதில் இருந்து இந்திய அரசின் உள்நோக்கம் என்னவென்பது வெளிப்பட்டிருக்கிறது. இந்திய ஆட்சியாளின் இத்தகைய தமிழன துரோகத்தை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை இந்தச் சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது. கடைசித் தமிழன் என்கிற கடைசிப் புலி உள்ளவரையில் அங்கே விடுதலைப் போர் தொடரும் என்பதில் ஐயமில்லை இனப்பகையும் , துரோகமும் வீழ்த்தப்பட்டு ஈழம் வென்றெடுக்கப்படும் என்கிற நம்பிக்கை இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. “மரபு வழி போர்’ முறையிலிருந்து கொரிலா போர் முறைக்கு புலிகள் மாறும் நிலை ஏற்படுமே தவிர கிளிநொச்சியே போரின் எல்லையாக மாறிவிடாது என்பதை இலங்கை அரசை தாங்கிப்பிடிக்கும் இந்திய அரசுக்கும் காலம் விரைவில் உணர்த்தும்.
Logan
தலித் மக்களையும் அவர்கள் அவலங்களையும் அப்படியே வைத்திருந்தால் மட்டுமே தொடர்ந்து தலமை கிடைக்கும் என்பதால் அதை ஐஸ் பெட்டியில் வைத்துவிட்டு ஆவி பறக்க சூடான சமாச்சாரம் எடுத்துக்கொண்டார்.
தூறல் நின்றாலும் தூவானம் நிற்காது போலும்!
குண்டு கட்டிச் சிதறும் குழந்தை உடல்கள்/ கொற இழுவையில்கொண்டுபோய் முனனிலையில் சாகவைத்த பாலகப்/ பாலிய போராளிகள்/ தலைவர்கள்/ கல்விமான்கள்/ சற்று மாறுபட்டு மூச்சுவிட்டவர் என புலிகளின் ஒருவழிப் பாதையில் கொன்று குவித்ததெதுவும் தொpயாவர் போல பேசுகிறார்????? இது சாதாரண நோயல்ல!!!!
கடைசிப் புலியென்ன முதல் புலி வந்தாலே தமிழ் தாய்மார் முறத்தாலடித்துக் கொல்லும் நிலை!
கொத்துக் கொத்தா தலித் மக்களைக் கொலை செய்த மேற்சாதி வெறியர்களை விராசணையே இல்லாமல் விடுவித்த திமுக/ அதிமுக இரண்டுடனும் பதவிக் கூட்டுக்கு பல்லுக் காட்டும் இவரா?
இலங்கைப் பிரச்சனையில் புலியை எதிர்ப்பவர்களா?
தொழுத கை தூக்கமுன் சுட்டுப்பொசுக்கி பள்ளிவாசலை இரத்தத் தொட்டியாக்கி/ தங்கள் இனத்தை வாழ்விடத்திலிருந்து துரத்திய துன்பங்களைப் பார்த்து வைராக்கியத்தோடு காத்திருக்கும் இஸ்லாமிய இனமா?
இல்லவே இல்லை தீருமாவளவனே தான்!!!!
msri
புலிகள் விடுதலை இயக்கமாக இருந்திருக்குமேயானால் கிளிநொச்சியும் போயிருக்காது+வீழ்ச்சியும் வந்திருக்காது!சுத்த இராணுவக் கண்ணோட்டத்திலான போரும் குறுந்தேசிய வெறி கொண்ட நடவடிக்கைகள் கொலைகள் போன்றவைகளே புலிகளின் வீழ்ச்சிக்கான பிரதானகாரணிகள்.இதை திருமாவளன்போன்ற தமிழ்நாட்டுத்தலைவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்! புலிகள் விடுதலை இயக்கமாக பர்ணமிப்பதும் அவர்கள் தலைமையில் விடுதலை என்பதும் சாத்தியமற்ற ஒன்றே!
kanthan
பிரபாகரன் ஒருவேளை திருந்த நினைத்தாலும் தமிழ்நாட்டில் உள்ள சில தலைவர்கள் விடமாட்டார்கள் போல் இருக்கிறது.உசுப்பேத்தி விட்டு நல்லாய் அடிவாங்க வைக்கிறார்கள் பிரபாகரனை.பாவம் பிரபாகரன்.தமிழ்படங்களில் உசுப்பேத்திவிடப்பட்டு தருமஅடி வாங்கும் வடிவேலுவின் நகைச்சுவை போல் ஆகிவிட்டது அவர் நிலை.
sami
இந்தளவு வீரமாகவும் உணர்ச்சியாகவும் பேசும் திருமாவளவன் ஏன் தன் தலைமையில் ஒரு ஜயாயிரம் பேர்களுடன் வந்து புலிகளுடன் சேர்ந்து போரிடக்கூடாது?இந்தக் கேள்வியை யாராவது இந்த திருமாவளவன்டம் கேட்கமாட்டார்களா?
ashroffali
பாவம். இன்னும் பகல் கனவு கலையவில்லை போலும். புலிகள் கொடுத்த பணத்தில் அளவுக்கதிகமாக ஏற்றிக் கொண்டால் இப்படித்தான். யாராவது கொஞ்சம் எழுப்பி விடப்பாருங்கள்……………………………
மாற்றுகருத்துதோழர்
” புலிகள் கொடுத்த பணத்தில் அளவுக்கதிகமாக ஏற்றிக் கொண்டால் இப்படித்தான்”
எப்படி!ஹமாஸ் தந்த பணத்தில் அளவுகதிகமாக ஏற்றிகொண்டு மகிந்தா பரிவாரங்கள் பகல்கனவு கண்டு உளறுவதுபோல!
chandran.raja
ஈழத்தமிழ் இனம் சீர்ரழிந்ததும் சிதறிஓடியதும் கதைதெரியாமல் பதவி மோகத்திற்காககவும் வாக்குவேட்டைக்காகவும் ஒருஇனத்தையே விலைபேசத் துணிந்துவிட்டார்களே! பாவிகள்.