மேல் மாகாணத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பொலிஸ் கணக்கெடுப்புகளின் போது புதிதாக 1657 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பின் போது தனது வதிவை உறுதிப்படுத்த போதிய ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாமல் போன சிங்களம், தமிழ், முஸ்லிம் மூவினங்களைச் சேர்ந்த 106 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
2003ம் ஆண்டிற்கு பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து மேல் மாகாணத்தில் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் வதிபவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு நேற்று முன்தினம் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலுள்ள பொலிஸ் பிரிவு களில் நடத்தப்பட்ட இந்த பொலிஸ் கணக் கெடுப்பின் போது 29,244 பேர் மொத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
29,244 பேரில் 15,975 ஆண்களும், 13,269 பெண்களும் அடங்குவர். இதேவேளை, கடந்த பல மாதங்களுக்கு முன்னர் பொலிஸார் நடத்திய தேடுதலின் போது பதிவு செய்யப்பட்ட வர்களிலிருந்து 1657 பேர் மேலதிகமாக இம்முறை பதிந்துள்ளனர். இவற்றில் 929 ஆண்களும், 728 பெண்களும் அடங்குவர்.
இதேவேளை மேல் மாகாணத்தில் தற்காலிகமாவோ, நிரந்தரமாகவோ தங்கியிரு க்கும் காரணத்தையோ, அதனை உறுதி செய்யும் ஆவணங்களையோ உரிய முறையில் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் 106 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இவர்களில் 67 தமிழர்களும், 36 சிங்களவர்களும், இரண்டு முஸ்லிம்களும் அடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.