இஸ்ரேலர்களின் மனிதாபிமானமற்ற குரூரமான தாக்குதல்களுக்கு முகம் கொடுத்திருக்கும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு நல்கும் வகையில் இஸ்ரேலிய உற்பத்திகளைப் பகிஷ்கரிக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வேண்டும் கோள்விடுத்துள்ளது. உலமா சபையின் உதவிப் பொதுச் செயலாளர் மெளலவி எம்.எஸ்.எம். தாஸிம் கையெழுத்திட்டு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரம், பலஸ்தீன மக்களின் இன்றைய அவல நிலைய தொடர்பாக வெள்ளிக் கிழமை ஜும்ஆ பிரசங்கங்களை நிகழ்த்துமாறும் சகல உலமாக்களையும் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது. உலமா சபை விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
பலஸ்தீனர்கள் மீதான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இதனை உடன் நிறுத்த ஆவண செய்யுமாறு உலக நாடுகளையும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் வேண்டிக் கொள்கின்றோம். பலஸ்தீனர்கள் ஒரு ஜீவமரணப் போருக்கு தள்ளப்பட்டுள்ள இந்த நிர்க்கதியான நிலையில் சர்வதேச முஸ்லிம்கள் மட்டுமன்றி முஸ்லிமல்லாதோரும் குரல் கொடுக்கின்றனர்.
இந்தப் பின்னணியில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் 04.01. 2009ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை, அதன் தலைவர் அஷ்-ஷைக் முப்ஃதி எம். ஐ. எம். றிஸ்வி தலைமையில் நடைபெற்ற, நாட்டின் பல முஸ்லிம் இயக்கங்களினதும், அரச சார்பற்ற நிறுவனங்களினதும் பிரதிநிதிகளுடனான “பலஸ்தீன முஸ்லிம்களின் அவலநிலை” தொடர்பான, அவசர ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பின்வரும் தீர்மானங்களை எடுத்தது.
01. 09.01.2009ம் திகதி வெள்ளிக் கிழமை நாடளாவிய ரீதியில் நாட்டின் அனைத்து ஜும்ஆ மஸ்ஜித்களிலும் கதீப்மார்கள் தமது குத்பாப் பேருரைகளை “பலஸ்தின் மக்களின் இன்றைய அவலநிலை”யை மையப்படுத்தியே நிகழ்த்த ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும், விசேடமாக வெள்ளிக்கிழமையில் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் நேரமாக இருப்பதால் அனைவரும் அதிகமதிகமாக துஆக்களில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்கிறது.
02. ஜவேளைத் தொழுகைகளுக்குப் பின்னர் குனூத் நாஸிலாவை அமுல்படுத்துமாறும், அதிகமதிகமாக பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக துஆக்களில் ஈடுபடுமாறு வேண்டுகோள்.
03. இந்த அத்துமீறல்களுக்கும், அநீதிகளுக்கும் எதிராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையில், எதிர்வரும் 09.01.2009 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து, இலங்கை முஸ்லிம்களின் ஒருமித்த கண்டனத்தை வெளிப்படுத்துவதற்காக பிரமாண்டமானதொரு கூட்டத்தை கொழும்பு சாஹிராக் கல்லூரி வளாகத்தில் நடாத்துவது எனவும், நாட்டின் பல பாகங்களிலும் உள்ள முஸ்லிம்கள் இதுவிடயத்தில் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிக்குமாறும், அவ்வமயம், ஷரீஆவின் வரையறைகளைப் பேணியும், யாருக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் எதுவித இடையூறும் விளைவிக்காமலும் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் முஸ்லிம் சமூகத்தை வேண்டிக் கொள்கிறது.
04. உலகை அடக்கியாள விரும்பும் யூதக் கும்பல்களின் அட்டகாசத்தை அடக்கும் வண்ணம் அவர்களை பொருளாதார ரீதியிலும், வேறு எந்த வழிகளிலெல்லாம் பலவீனமடையச் செய்ய முடியுமோ அவ்வழிகளைக் கையாள்தல் வேண்டும். அதன் முதற்படியாக இஸ்ரேலுக்கும், உலகில் பலபாகங்களிலும் வாழும் யூத இரத்த வெறிக் காட்டேரிகளுக்கும் செல்வத்தை தேடிக் கொடுக்கும் அனைத்து நாடுகளினதும் உற்பத்திப் பொருட்களையும், உற்பத்தி நிறுவனங்களையும் நாட்டு முஸ்லிம் சமுகம் பகிஷ்கரிக்க வேண்டும் எனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.
மாற்றுகருத்துதோழர்
கிபீர் யுத்தவிமானம் டோரா யுத்த படகு எஸ்எரிஎப் எனும் கொலைகார சிங்களபடைகட்டமைப்புதான் நான் அறிந்தவரை சிறிலங்காவிலுள்ள இஸ்ரேலிய உற்பத்திகள். இவற்றை பஸ்கரித்தால் சிறிலங்காவின் நிலை!