தேர்த லைக் கண்காணிக்கும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) வேட்பு மனுத்தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் நேற்று புதன்கிழமை வரை 8 தேர்தல் வன்முறை சம்பவங்களை பதிவு செய்துள்ளது. இது குறித்து அவ்வியக்கத்தின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்து தெரிவிக்கையில்;
தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் திகதியான டிசம்பர் 11 முதல் அறிவிக்கப் பட்டதையடுத்து புதன்கிழமை வரை 8 தேர்தல் வன்முறைச் சம்பவங்களை பதிவு செய்துள்ளோம். இறுதி தேர்தல் வன்முறைச் சம்பவமாக புத்தளத்தில் முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயம் தாக்கப்பட்டு அங்குள்ள சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதை இறுதியாக நாம் பதிவு செய்துள்ளோம். இத்தாக்குதலுடன் வடமேல் மாகாணத்தில் 3 வன்முறைகள் இடம் பெற்றுள்ள அதேசமயம் மத்திய மாகாணத்தில் 5 சம்பவங்களையும் பதிவு செய்துள்ளோம்.
தற்போதே வேட்பாளருக்கான இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் தேர்தல் வன்முறை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதெனத் தெரிவித்தார்.