கிளி நொச்சியை படையினர் கைப்பற்றும் போது இந்திய விமானங்கள் இலங்கை வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து நோட்டம்விட்டதாக வெளிவந்துள்ள செய்தியை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா மறுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க பிரதமரிடம் மேற்படி விடயம் தொடர்பான கேள்வியொன்றை கேட்டார்.
இந்திய விமானங்கள் கிளிநொச்சி வான்பரப்புக்குள் பறந்தவாறு நோட்டம்விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு இலங்கை வான்பரப்புக்குள் இந்திய உளவு விமானங்களுக்கு வருவதற்கு அனுமதித்தது யார்? இவ்வாறான செய்தி பற்றி விளக்கமளிக்க முடியுமா என அனுரகுமார திஸாநாயக்க எம். பி. கேள்வி எழுப்பினார்.
பிரதமர் இதற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
பதிலளிப்பதற்காக எழுந்த பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்க “பொய்யான செய்தி” எனக் கூறிவிட்டு அமர்ந்தார்.