வெளி விவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை விரைவில் இலங்கைக்கு அனுப்பிவைப்பேன் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதலமைச்சர் கருணாநிதியிடம் (07) புதன்கிழமை இரவு உறுதியளித்துள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு சென்னையில் ஆரம்பமானது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு புதன்கிழமை இரவு வருகைதந்த இந்தியப் பிரதமரை கருணாநிதி சந்தித்துப் பேசினார்.
அச்சந்திப்பின் போதே முகர்ஜியை விரைவில் கொழும்புக்கு அனுப்பவுள்ளதாக மன்மோகன் சிங் உறுதியளித்திருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் கருணாநிதி சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும் இறுதியாக இலங்கைப் பிரச்சினை பற்றி பேசப்பட்டதாகவும் அப்போது ஏற்கனவே உறுதியளித்ததன் பிரகாரம் முகர்ஜி எப்போது இலங்கை செல்கிறார் என்று கருணாநிதி கேள்வி எழுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கைத் தமிழர்களின் நிலமை குறித்து கருணாநிதி விரிவாக எடுத்துக் கூறியபோது, அவரின் உணர்வை புரிந்து கொள்வதாக கூறியிருக்கும் மன்மோகன் சிங் சாத்தியமான அளவுக்கு துரிதமாக முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பிவைக்கவிருப்பதாக உறுதியளித்தாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க இலங்கை அரசு விரும்பாமல் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புவது சாத்தியமற்றது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இந்தவார முற்பகுதியில் கூறியிருந்தார். அதேசமயம் முகர்ஜியை அனுப்ப சாக்குபோக்கு கூறுவதாக விஜய டி ராஜேந்தர் போன்ற தமிழக அரசியல்வாதிகள் மன்மோகன் சிங் அரசை கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையிலேயே கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு இந்த அறிக்கையை விடுத்திருக்கிறது.
msri
ஏன் வருகிறார் முகர்ஐP பிரபாகரனை பிடித்தால் எப்படி இந்தியாவிற்கு அனுப்புவது என்று கலந்தாலோசிக்வா?
accu
எப்படிப்போய்விட்டது எமது நிலமை பார்த்தீர்களா? பிரணாப் முகார்ஜி இலங்கை போவதே ஏதோ ஈழம் பிரித்துக் கொடுப்பதற்கு ஒத்த ஒரு செயல் போல் கருதவேண்டிய நிலை. கான்சர் வியாதி முத்தி கடைசிக்கட்டத்தில் உள்ளவனைப் பார்த்து அவனது நிலைக்குக் முப்பது வருசத்துக்கு முன் அவனுக்கு வந்த காய்ச்சல்தான் காரணம் அல்லது அதுக்குப் பிறகு கையில கத்தி வெட்டினது பிறகு ஒருமுறை தடிமன் வந்தது என்று ஒன்றுமே தெரியாதது போல் பாசாங்கு பண்ணுபவர் பலர் இருக்கிறார்கள். எமது இன்றைய நிலைக்கு யார் காரணம் எந்தெந்தச் செயல்கள் காரணம் என்பதை தெரிந்தும் தெரியாதது போல் வேறு காரணங்களைத் தேடிக்கொண்டு இருப்போமானால் எமக்கு விடிவே இல்லை.
palli
அச்சு பல்லியை போல் சொல்லவருவதை எதோ ஒரு வழியில் சொல்லியுள்ளீர்கள். முற்பாதி புரிகிறது. பிற்பாதி பல்லிக்கு புரியவில்லை முடிந்தால் புரியும்படி தரவும் நன்றி. சரி இப்போ பல்லியின் பிழைப்பு. மன்மோசிங் ஒரு வையித்தியர். கருனானிதி ஒரு வருத்தகாரர் வையித்தியரிடம் எப்போதும் எமது வருத்தத்தை சொல்லகூடாது. (வயிற்று வலிக்கும்; வைத்து குத்துக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு.) சொன்னால் நாம் சொல்லும் வருத்தத்துக்கு சில மருத்துவர்கள் மருத்துவம் செய்து விடுவார்கள். அதுதான் கருனாநிதிக்கும் நடக்கிறது. கருனாநிதியின் கோரிக்கை இலங்கையில் தமிழர்க்கு பிரச்சனை (எனக்கு வயித்து வலி என்பது போல்)ஏதாவது செய்யுங்கள். என்பது போல் உள்ளது. இதுக்கு மாறாக (எமது வருத்தத்தை மருத்துவரிடம் சொல்லாது இருந்தால். மருத்துவர் தனது திறனை கொண்டு முதல் எனக்கு உள்ள வருத்தத்தை அறிந்து அதுக்கு உரிய மருத்துவத்தை செய்வார் அல்லவா??) இலங்கையில் தமிழர்க்கு என்னதான் நடக்கிறது? இதுக்கு என்னதான் தீர்வு?? இதை இப்படியே விட போகிறீர்களா?? என மானில அரசு( கருனாநிதி) மத்திய அரசிடம்(மன்மோசிங்கிடம்) கேட்டிருந்தால் .மத்திய அரசு இப்படி அமைதியாக இருக்க முடியாது. ஒரு பிச்சைகாரன் வந்து எம்மிடம் பிச்சை கேப்பதக்கும், பிச்சை தொகையாக ஒரு மதிப்பு சொல்வதுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. ஆகவேதான் பல்லி இப்படி கருதுகிறது.அதை செய், இதை செய்,என சட்டம் போட்ட தமிழக தலைவர்கள். மத்தி அரசிடம் இலைங்கை பிரச்சனையில் என்ன தான் முடிவு என ஒரு கேள்வி கேட்டிருந்தால் மத்திய அரசு ஏதாவது செய்ய முற்பட்டிருக்கும். அதை விட்டு அதை செய், இதை செய், என தமிழக தலவர்கள் கட்டளை இட்டதால் அது முடியாமல் போகவே எனோதானோ என சாக்கு சொல்லி காலம் கடத்தி விட்டது டெல்லி.