சென் னையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலினால் அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து கவலைதெரிவித்தபோதும் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து அவர் எதுவும் பேசாமல் மௌனம் காத்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதியும் இலங்கை பிரச்சினை பற்றி மௌனம் சாதித்தார்.
நந்தம்பாக்கத்தில் நடைபெறும் வெளிநாட்டுவாழ் இந்தியர் விழாவை முறைப்படி ஆரம்பித்துவைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், காஸா பகுதியில் பாலஸ்தீன அப்பாவிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்தார். பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பகுதியில் அமைதி திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார். எனினும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி எதுவும் அவர் குறிப்பிடவில்லை. அதே போல முன்னதாக உரையாற்றிய தமிழக முதல்வர் கருணாநிதியும் இலங்கை பிரச்சினை பற்றி குறிப்பிடவில்லை.
msri
தனிநாடாக இருந்த காஐ;மீரை பலாத்காரமாக பிடித்து தனது ஒரு மாநிலமாக்கி அம்மக்களின் சுயநிர்னய உரிமைப்போரை அடக்கியொடுக்கும் இந்திய-மக்மோகன்சிங் இஐ;ரேலிய பயங்கரவாதத்தை கண்டிப்பது கசாப்புக் கடைக்காரன் ஐPவகாருண்ணியம் பற்றி பேசுவதுபோல் உள்ளது!