புலிகளின் மற்றுமொரு முக்கிய பிரதேசமாக விளங்கிய ஆனையிறவு பிரதேசத்தை இன்று மாலை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி விட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். முகமாலை மற்றும் கிளாலி பிரதேசங்களிலிருந்து முன்னேறி வந்த இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப்பிரிவினர் ஆனையிறவு பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இராணுவத்தின் 53 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமல் குணவர்தன தலைமையிலான படையினரும், 55 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படையினருமே ஆனையிரவு நகரையும் அதன் சுற்றுப்புறத்தையும் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை, யாழ். – கண்டி ஏ-9 பிரதான வீதி படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 23 வருடங்களின் பின்பு யாழ். – கண்டி ஏ-9 பிரதான வீதி முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ashroffali
யாழ்ப்பாண மக்களுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டது. பொருட்களின் விலையில் சடுதியான கீழிறக்கத்தை எதிர்பார்க்கலாம். அதற்கு மேலாக விமானம் கப்பல் என அந்த மக்கள் எதிர்கொண்ட பிரயாண அவலம் வெகுவிரைவில் நிரந்தரமாக தீர்த்து வைக்கப்படப் போகின்றது. வரப் போகும் தைப்பொங்கலுக்கு முன்பதாக ஏ-9 வீதியை பொதுப் போக்குவரத்துக்காக திறந்து விட முடியாது போனாலும் அந்தப் பாதை விடுவிக்கப்பட்டதே கூட யாழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு மகத்தான பொங்கல் பரிசாகவே இருக்கும்.
padamman
ஆனையிறவு பிரதேசத்தை இன்று படையினர் கைப்பற்றியதை தொடர்ந்து, புலிகளின் இராணுவ பேச்சாளர் 30 பேர்களுடன் படையினரிடம் சரன்அடைந்துள்ளதக ஒரு தகவல்
மாற்றுகருத்துதோழர்
அமெரிக்கப் படைகளால் வியட்நாம் மக்கள் மீது கொட்டப்பட்ட குண்டுகள் இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம்.
அமெரிக்கப்படைகள் வியட்நாம் மக்கள் மீது கொட்டிய குண்டுகளை விட சிறிலங்கா அரசு ஈழ மக்கள் மீது கொட்டிய குண்டுகள் ஐந்து மடங்கு அதிகம். இரண்டாம் உலகப் போர்ச்சூழலை விட படுபயங்கரமான குண்டுக் கழிவுகள் தமிழர் தாயக நிலங்களின் மீது கொட்டப்பட்டிருக்கின்றன.
ஹோசிமின் படைகளின் இளம் தாதியாக பணியாற்றிய ஒரு பெண்ணின் வாக்குமூலம்.
‘அவர்கள் எங்களின் பூர்வீக கிராமங்களுக்குள் நுழைந்த போது நாங்கள் எங்கள் நெல் வயல்களை தீயிட்டுக் கொழுத்தினோம். எமது மக்கள் காலம் காலமாக குடிநீராக பயன்படுத்தி வந்த கிணறுகளில் எண்ணெய்களை எடுத்து ஊற்றினோம். அன்று எங்கள் கண்களில் வழிந்தது கண்ணீரல்ல ரத்தம். எதிரிகளின் கைகளின் சிக்கக் கூடாது என்பதற்காக எங்கள் பெண் குழந்தைகளை கொன்றிருக்கிறோம். முதியவர்களை எரிய விடப்பட்ட நெல்வயல் மீது வீசினோம். கடைசியில் அவர்கள் ஹனாயைக் கைப்பற்றி எங்கள் கிராமங்களுக்குள் நுழைந்த போது அவர்களுக்காக எதுவும் மிச்சமிருக்கவில்லை. கருகிய பயிர்களையும் மறிக்கப்பட்ட ஓடைகளையும் பயன்படுத்த முடியாத படி அவர்கள் விக்கித்து நின்ற போது நாங்கள் ஹனாயைக் கைப்பற்றினோம். பின்னர் எங்கள் பழைய நகரத்தை மீட்டெடுத்தோம்.”
palli
இளம் திரையனா???????????
சரிஅதை விடுவோம். ஆனையிறவை ராணுவம் பிடித்துவிட்டதுக்கு மகிந்தாவுக்கு காது குத்து திருவிழா நடத்தவில்லையா?? அப்படியே ஜரோப்பா நாடுகள் அனைத்தும் பனியால் மூடிவிட்டதாக ஒரு தகவல். அதுக்கு நிறைய உப்பு வேண்டுமாம்.ஆனால் தற்ப்போது அங்கு உப்பு பற்றா குறையென கேள்வி. அங்கு ராணுவம்(20.000மேல் என அரச செய்தி) சும்மாதானே இருக்க போகிறார்கள். அவர்களை உப்பு தயாரிக்கும் தொழிலில் விட்டால் மகிந்தா எடுத்த பிச்சையில்(ஆயுதத்துக்காக) ஒரு வீதமாவது கட்டலாம்தானே. அத்துடன் மகிந்தா போற போக்கை பார்த்தால் பாராளமன்றமே கரடிபோக்கு சந்தியில் தான் நடக்கும்போல் உள்ளது. எது எப்படியோ ஒரு தமிழ் பிரதேசம் இலங்கயின் தலைநகராக வருவது எமக்கும் பெருமைதானே.
பல்லி.
chandran.raja
அரசியலைத்தவிர புலிகள் எல்லாவற்றிக்கும் தகுதியானவர்களே!
anathi
கரடிபோக்கு சந்தி எங்க இருக்கு?