தனது உளவு விமானத்தை ‘ரோ’ ‘பிரபாகரனைக் கண்காணிக்கவே பயன்படுத்தி வருகிறது. – திருமாவளவன்

thiruma.jpgதனது உளவு விமானத்தை ‘ரோ’ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக் கண்காணிக்கவே பயன்படுத்தி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்மைக் காலமாக சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய அரசு ராணுவ உதவிகளும் பண உதவிகளும் பெருமளவில் செய்து வருவது உறுதிப்பட்டு வருகிறது. கிளிநொச்சியை விட்டு விடுதலைப்புலிகளும் பொது மக்களும் இடம் பெயர்ந்துள்ள ஓரிரு நாட்களுக்குள் இந்திய அரசின் உளவு நிறுவனமான ரோ அமைப்பின் நவீன விமானம் ஒன்று தமிழீழத்தின் கடலோரப்பகுதிகளையும் காடுகளையும் கண்காணிப்பு ஆய்வு செய்வதற்கு 3-ம் தேதி அதிகாலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து சில ‘ரோ’ அதிகாரிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது.

உயர்ந்த தொழில் நுட்ப வேவு கருவிகளைக் கொண்ட இந்த வானூர்தி இரவு நேரத்திலும் தரையில் நடந்து செல்லும் ஒருவரை மிகத்துல்லியமாக புகைப்படம் எடுக்குமளவிற்கு ஆற்றலுடையது என்று தெரிய வருகிறது.

முதல் – அமைச்சர் கருணாநிதியின் முயற்சியில் இந்திய பிரதமரை சந்தித்து அனைத்துக்கட்சித் தலைவர்களின் கோரிக்கையையும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை வலியுறுத்திய தீர்மானத்தையும் புறந்தள்ளியது மட்டுமில்லாமல் முல்லைத்தீவுப் பகுதிகளைக் கண்காணிக்க ரோ அமைப்பின் அதிகாரிகளை உயர் தொழில் நுட்ப உளவு விமானத்தில் அனுப்பியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பிரபாகரனை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. தமிழீழ விடுதலைப்போரை நசுக்கவும், அதன் தலைவரை அழித்தொழிக்கவும் இந்திய அரசு வெளிப்படையாக ஈடுபட்டிருப்பது தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்கவே முடியாத செயலாகும்.

இந்திய அரசு,  இந்தக் காட்டிக் கொடுக்கும் கேவலத்தை உடனடியாகக் கைவிடவில்லையெனில் பொங்கியெழும் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Sarani
    Sarani

    இலங்கைpயன் இனப் பிரச்சனைக்கு ஆயுதவடிவம் கொடுத்து இந்தியாவின் கொழுத்த முதலாளிகளுக்காக இலங்கையிற் பாதியை வாங்கிக்கொண்டது இந்திய அரசு. தமிழ் நாட்டு வாக்குகளுக்காக அரசு மக்கள் எழுச்சிக்கு மதிப்பளிக்கப் போவதில்லை. அதைத் தீர்மானிப்பது அந்த முதலாழிகளின் லாபத்தில் மிகச் சிறிய தொகைப் பணமே. இதை நீங்கள் பூpந்து கொள்ளாமல் தொண்டை கிழியக் கத்தி என்ன பலன்?

    இலங்கைக்கு இராணுவ உதவி/ உளவு விமானத்தை அனுப்புதல்/முதலீட்டு சுரண்டல் என்று இலங்கையின் இறமையை கேள்விக்கு உட்படுத்தும் கேவலமா வெளிநாட்டுக்கொள்கையை எதிர்க்கவேண்டாமா நீங்கள்?

    இந்தியப் பெரு நிலப் பரப்பின் தெங்கு தசை போல உள்ள “நேபாள” மென்ற சிறிய நாட்டில் மன்னராட்சியை தூக்கிவிட்டு மக்களாட்சியை ஏற்படுத்த முனைந்த போது இதற் கெதிரான குழப்பங்களைத் தூண்டியதும் குழப்பக் கும்பலுக்கு பீகார் உத்திரப் பிரசேங்களூடாக ஆயுத வினியோகம் நடத்தியதும் இந்து வெறியர்களை இணைத்துக்கொண்டு றோ செய்த நடவடிக்கைகள்! இவற்றையும் மீறி அமைந்த மக்களாட்சியைக் குழப்பும் முகமாக இப்போ இந்துப் பூசாரிகளை அனுப்பி வைத்தள்ளது!

    இப்படி அயலிருக்கும் சிறிய நாடுகளைத் திண்டு ஏப்பமிட நினைப்பதும் எந்த அண்டை நாட்டோடும் நல்லுறவற்று இருப்பதுமான அரசியந்திரத்தைக் கொண்டிருக்கும் பாரத தேசம் பண்பாடுமிக்கதா?

    இதைத் தட்டிக்கேட்காத நாட்டுப் பிரசைகள் மனுதர்மம் மிக்கவரா?
    இந்த வகை தீமையிலிருந்து விடுவித்து எம்மை இறமையோடு வாழ வழி செய்யுங்கள். தயவு செய்து இதற்காக முதலில் போராடுங்கள். நன்றி

    Reply