காஸாவில் இஸ்ரேல் தாக்குதலை உடனடியாக நிறுத்த வலியுறுத்தும் போர் நிறுத்தம் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீரமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் இந்த தீர்மானத்தின் மீதான வாக்களிப்பில் அமெரிக்கா பங்கேற்கவில்லை. 3 நாட்கள் நடைபெற்ற கடும் விவாதத்தைத் தொடர்ந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் தீர்மானத்தில் எஞ்சிய 14 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இஸ்ரேல் மீது பலஸ்தீனத்தை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதல்களில் இதுவரை 700க்கும் மேற்பட் டோர் கொல்லப்பட்டனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொன்டலிசா ரைஸ், இந்த தீர்மானத்தை, நோக்கத்தை அமெரிக்கா ஆதரிப்பதாக கூறினார்.