தென்னிந்திய தமிழ் திரைப்படங்களை இலங்கையில் திரையிடப்படுவது தடைசெய்யப்பட வேண்டும் என்று கோரிய சில சுவரொட்டிகள் கண்டி நகரப்பகுதியிலும் மேலும் சில நகரப்பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்ததை காணமுடிந்தது. கண்டி மத்திய பேருந்து நிலையம் சந்தை தொகுதி கட்டிடங்கள் மற்றும் புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளில் தென்னிந்திய தமிழ் திரைப்படங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
sothi
இவ்வளவு காலமும் நடைபெற்ற போராட்டத்திலிருந்து இலங்கை அரசு கற்றுக் கொண்ட பாடம் தான் என்ன? இலங்கை அரசும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் கட்சிகளும் இலங்கையில் உள்ள சிறுபான்மையினர்க்கு அரசியல் தீர்வு முனவைக்கப்ட வேண்டும் என்ற எண்ணம் அற்றதாகவே பார்க்க வேண்டும் இலங்கையில் இனவாதம் தூபம் இடப்படுவதையும் அரசை விமர்சிப்பவர்கள் கொல்லப்படுவதும் இதை உறுதிப்படுத்துகிறது.
ashroffali
தென்னிந்திய திரைப்படங்கள் தொடர்பில் அரசாங்கம் தாராளமய கொள்கையையே கடைப்பிடிக்கின்றது. அதன் இறக்குமதி மற்றும் திரையிடல் தொடர்பில் எதுவித கட்டுப்பாடுகளும் விதிக்கும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை.அதே நேரம் அவரவர் கருத்துப்படி கருத்துக் கூறும் சுதந்திரத்தை அரசாங்கம் மதிக்கின்றது. அந்த வகையிலேயே இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கலாம். அதற்காக அரசாங்கம் அவ்வாறான ஒரு முடிவை ஒரு போதும் எடுக்கப் போவதில்லை.