படு கொலை செய்யப்பட்ட “சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிக் கிரியை எதிர்வரும் திங்கட்கிழமை மாலை பொரளை கனத்தையில் இடம்பெறவுள்ள நிலையில், இறுதி நிகழ்வில் இன, மத, கட்சி பேதமின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு அழைப்புவிடுத்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; “சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிக் கிரியை எதிர்வரும் திங்கட்கிழமை மாலை பொரளை கனத்தை மயானத்தில் இடம்பெறவுள்ளது. இவரது படுகொலையானது ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமையையும் மீறுவதால் அன்றைய தினம் அனைவரும் கட்சி, இன, மத பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டும். அதேபோல் இப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும் வெள்ளைக் கொடியையும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடிகளையும் நாட்டிலுள்ள மக்கள் பறக்கவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
sothi
இவ்வளவு காலமும் நடைபெற்ற போராட்டத்திலிருந்து இலங்கை அரசு கற்றுக் கொண்ட பாடம் தான் என்ன? இலங்கை அரசும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் கட்சிகளும் இலங்கையில் உள்ள சிறுபான்மையினர்க்கு அரசியல் தீர்வு முனவைக்கப்ட வேண்டும் என்ற எண்ணம் அற்றதாகவே பார்க்க வேண்டும் இலங்கையில் இனவாதம் தூபம் இடப்படுவதையும் அரசை விமர்சிப்பவர்கள் கொல்லப்படுவதும் இதை உறுதிப்படுத்துகிறது.
ashroffali
நானும் ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் துணிச்சலுடன் செயற்பட்ட மூத்த ஊடகவியலாளர் லசந்தவுக்கு என் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எம்தேசத்தின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப எம்மத்தியிலிருந்து ஆயிரமாயிரம் லசந்தக்கள் உருவாக வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இலங்கையின் ஒருமைப்பாட்டை விரும்பாத ஒரு சில சக்திகள் மேற்கொண்டு வரும் கேவலமான செயற்பாடுகள் சர்வதேச ரீதியில் இலங்கைக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை………………… எந்த நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் லசந்தவின் படுகொலை மன்னிக்க முடியாத ஒரு மாபெரும் தவறாகும்.எப்படியிருந்த போதும் உண்மைகள் உறங்குவதில்லை. என்றைக்காவது ஒரு நாள் வெளி வந்தே தீரும். குற்றவாளிகள் என்றைக்கும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி வாழ முடியாது.
படுகொலை செய்யப்பட்ட லசந்தவுக்கு எனது ஆழந்த அனுதாபங்கள்.