லசந்த படுகொலை தொடர்பாக பி.பி.சி.யின் தமிழோசை, சந்தேசிய செய்திகளுக்கு தணிக்கை?

“சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக பி.பி.சி.தமிழோசை மற்றும் “சந்தேசிய’வில் ஒலிபரப்பான செய்திகள் முழுமையாகத் தணிக்கை செய்யப்பட்டது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதன்போது, லசந்த விக்கிரமதுங்கவின் கொலையைக் கண்டித்து ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா விடுத்த அறிக்கையின் பெரும் பகுதியும் தணிக்கை செய்யப்பட்டது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பி.பி.சி.தமிழோசையும் சிங்கள சேவையான சந்தேசியவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வரிசை மூலம் (எவ்.எம்.) ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. அண்மைக்காலமாக பி.பி.சி.யின் இவ்விரு ஒலிபரப்பிலும், இலங்கையின் யுத்தம் மற்றும் அரசியல் தொடர்பான செய்திகளில் பெரும்பாலானவை முழுமையாகத் தணிக்கை செய்யப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமை, கல்கிசை பகுதியில் சிரேஷ்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டது தொடர்பான செய்தியும்  தணிக்கை செய்யப்பட்டது.

இவரது கொலையைக் கண்டித்து அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா வெளியிட்ட அறிக்கையின் பெரும் பகுதியும் தணிக்கை செய்யப்பட்டது. அதுபோல் லசந்தவின் பத்திரிகைத்துறை நண்பர்கள், ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளின் கருத்துகளும் முற்றாகத் தணிக்கை செய்யப்பட்டன. இலங்கையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தணிக்கை எதுவும் அமுல்படுத்தப்படாத நிலையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பி.பி.சி.ஒலிபரப்புக்கு தணிக்கையை மேற்கொள்வது குறித்தும் பல்வேறு தரப்புகளும் கேள்விகளை எழுப்பியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை எம்.ரி.வி.நிறுவனம் மீதான தாக்குதல் தொடர்பாக தமிழோசை மற்றும் சந்தேசியவில் ஒலிபரப்பான செய்திகளும் தணிக்கை செய்யப்பட்டன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • அருட்செல்வன்
    அருட்செல்வன்

    இலங்கையில் கருத்துச் சுதந்திரம் மேம்படுத்தப்பட வேண்டும். அத்துடன் ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகளை மேற்கொண்டோரை இனங்காண முழுமையானதும் தெளிவானதுமான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவும் வேண்டும் என உலகவங்கி தெரிவித்துள்ளது.

    அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில், “சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலகவங்கி வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள?தாவது;

    “இலங்கையின் ஊடகங்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்துச் செல்லுதல் மற்றும் பல ஊடகவியலாளர்கள் கொடூரமாக கொல்லப்படுதல் போன்றவற்றிற்கு உலகவங்கி கடும் கண்டனம் தெரிவிக்கின்றது. சுதந்திரமான ஊடகங்களே, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சரிவடையாமல் பாதுகாக்கும் அடித்தளமாகும். இவ் ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள், மக்களின் குரலைப்பிரதிபலித்தல் மற்றும் கண்காணிப்பாளராக தொழிற்படல் போன்ற செயற்பாடுகளை முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தும். எனவே, இவ் வன்முறைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விரைவானதும் முழுமையானதுமான விசாரணைகளை மேற்கொள்ள’ வேண்டும

    Reply
  • sothi
    sothi

    இவ்வளவு காலமும் நடைபெற்ற போராட்டத்திலிருந்து இலங்கை அரசு கற்றுக் கொண்ட பாடம் தான் என்ன? இலங்கை அரசும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் கட்சிகளும் இலங்கையில் உள்ள சிறுபான்மையினர்க்கு அரசியல் தீர்வு முனவைக்கப்ட வேண்டும் என்ற எண்ணம் அற்றதாகவே பார்க்க வேண்டும் இலங்கையில் இனவாதம் தூபம் இடப்படுவதையும் அரசை விமர்சிப்பவர்கள் கொல்லப்படுவதும் இதை உறுதிப்படுத்துகிறது.

    Reply