வடக்கு மாகாணத்தில் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நிரந்தர நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு யாழ். மாவட்டப் பாடசாலைகளில் தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் யாழ். வலயக்கல்வி அலுவலகத்திலுள்ள மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளன. தற்காலிகமாக எதிர்வரும் மூன்று மாதங்கள் வரை கடமையாற்றுமாறு இவர்கள் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கின்றனர். வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு முதலாம் கட்டமாக 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 287 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2 ஆம் கட்டமாகவும் ஒரு தொகுதி பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்த 2 கட்ட நியமனத்தின் போதும் விடுவிக்கப்படாத பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒரு மாதகாலத்தின் பின்னர் அங்கு சென்று தமது கடமைகளைப் பொறுப்பேற்குமாறு கேட்கப்பட்டிருந்தனர். ஆனால், ஒன்றரை மாதங்கள் கடந்திருக்கின்ற நிலையில், மூன்று மாதங்கள் வரை யாழ்.மாவட்ட பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கான தற்காலிக நியமனக் கடிதங்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கத