ஆனை யிறவு மீட்பு மற்றும் ஏ-9 வீதி பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்தது நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். இவ்வாறு ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஆணையிறவைப் படையினர் கைப்பற் றியது தொடர்பாகவும் ஏ-9 பாதை முற்று முழுதாக படையினரால் விடுவிக்கப்பட்டது தொடர்பாகவும் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்; கடந்த மாதம் யாழ். சென்று அங்கு மக்கள் குறைகளைத் தீர்க்க தினசரி நூற்றுக்கும் அதிகமான மக்களைச் சந்தித்து வருகிறேன். நான் மீண்டும் கொழும்பு சென்றுவிடுவேனோ என எண்ணும் மக்கள் தினசரி முண்டியடித்துக் கொண்டு என்னைப் பார்க்க வருகின்றனர். அவர்களிடம் நான் கூறியிருந்தேன்; இனிமேல் நான் கொழும்பு செல்வதானால், ஏ-9 பாதை திறக்கப்பட்ட பின்னரே செல்வேன். எனத் தெரி வித்திருந்தேன். நான் கூறிய கூற்று இன்று உண்மையாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சி தருகிறது.
ஆனையிறவு கைப்பற்றப்பட்டு ஏ-9 பாதை திறக்கப் படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். அந்த மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன். எனவும் தெரிவித்தார்.
chandran.raja
“புத்திமான் பலவான் ஆகிறான்” அவரின் சேவை தமிழ்மக்களுக்கு தொடர்ந்தும் கிட்டடும். புலிதவிர்ந்த மற்றை இயக்கங்களுடன் இணைந்து செயல்லாற்றுவதையே புலம்பெயர் தமிழராக நாம் வேண்டிநிற்பது. அதை அவர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம். டக்கிளஸ் தேவானந்தாவுக்கும் அவர் தோழருக்கும் எமது மனப்பூர்வமான வாழ்துக்கள்.
palli
தோழரே இதே போல் ஒருமுறை பரந்தன் ராசனுடன் மட்டக்களப்புசிறையில் அடாவடிதனாமாய் பேசி அதுக்குரிய பலனையும் அன்று அடைந்ததுதான் எனக்கு நினைவு வருகிறது.
நாமும் உமக்கும் மகிந்தாவின் இனஅழிப்பில் பெரும் பங்குண்டு எனதான் சொல்லுகிறோம். அழிப்பிலேயே பங்குள்ளபோது மகிழ்ச்சியில் சொல்லவும் வேண்டுமா???? எனி உங்களுக்கு யாழ்பாணத்தில் போட்டிக்கு ஆள் இல்லைதானே. சங்கரியருக்கு கிளினொச்சி பிடித்து கொடுத்தாச்சுதானே. வாழ்க உங்கள் மகிழ்ச்சி ஆரவாரம் தொடர்க தோழரின்உதவி இன ஒழிப்பு.
பல்லி.
anathi
பல்லியாரே டக்ளஸ் என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள்.காட்டுக்குள் ஒரு இயக்கத்தை உருவாக்கியிருக்க வேண்டுமோ?
புலியும் சிங்கமும் துரத்தி துரத்தி குதறியிருக்க வேண்டுமோ?உங்களுக்கும் பிழையாக யாரோ உருவேற்றுகிறார்கள்.இது தமிழினத்திற்கு நல்லதில்லை.
chandran.raja
கொழும்பு காலி கண்டி போன்ற நகரங்களில் இன்றும் தமிழனோ தமிழ் மூஸ்லீமோ குடியேறமுடியும் குடியேறி ஒருதொழில் செய்யமுடியும். புலிகள் காலத்தில் வன்னியிலேயோ யாழ்பாணத்திலேயோ சிங்களமகன் ஒரு பேக்கறியாவது போட முடிந்ததா? காங்கேசன்துறை சீமெந்து தொழில்சாலையில் வேலை செய்த சிங்கள தொழிலாளருக்கு என்ன நடந்தது? அரசு இனஅழிப்பு செய்கிறது என்றால் என்ன அர்த்தம் ?கடந்த கால்நுhற்றாண்டுக்கு மேலாக எமக்கு நாமே மண்ணையள்ளிப் போட்டதும் தலையிலே தீமூட்டிக் கொண்டதும் தான் நடந்து முடிந்த வரலாறு. அரசியல்வாதிகள் வானத்தில்லிருந்து இறங்கிவந்த தேவதூதுவர்கள் அல்ல பிழைப்பு நடத்தவர்களும் உண்டு. சேவைசெய்ய வருபவர்களும் உண்டு. சோரம் போகிறவர்களும் உண்டு. இலட்சியத்தை இறுக்கி பற்றுவர்களும் உண்டு. நாம் தான் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளவேணடும் ஒரு சரத் பொன்சேகராவுக்காக சிங்கள இனத்தை வெறுக்க முடியுமா? ஒரு பிரபாகரனுக்காக தமிழ்இனத்தை வெறுக்க முடியுமா?
palli
//டக்ளஸ் என்ன செய்ய வேண்டும் //
மக்களை நேசித்திருக்க வேண்டும். அல்லது எம்மைபோல் ஏதாவது ஒருநாட்டுக்கு ஓடி ஒழித்து தற்ப்போது தேசத்தில் பின்னோட்டம் விட்டிருக்க வேண்டும் .பல்லிபோல். புரியாவிட்டால் நாம் ஒன்னுமே செய்ய முடியாது.
anathi
ஒருநாட்டுக்கு ஓடி ஒழித்து தற்ப்போது தேசத்தில் பின்னோட்டம் விட்டிருக்க வேண்டும் பல்லிபோல்.
பல்லியாரே புலியும் இப்படித்தான் ஓடிப்போ என மிரட்டிற்று. நீங்களும் அதையே சொல்கிறீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் மெளனமாய் இருந்திருக்க வேண்டும் எனகிறீர்கள். டக்ளஸின் அரசியலுக்கு காலமும் மக்களும் மட்டுமேதீர்ப்புக் கூறக் கூடியவை. ஓடீ ஒழித்துக் கொண்ட நாமல்ல.
palli
//பிடிக்கவில்லை என்பதால் மெளனமாய் இருந்திருக்க வேண்டும் எனகிறீர்கள்//
ஜயோ ராசா நான் அப்படியெல்லாம் சொல்லமாட்டேன் (நான்னுமென்ன அரசின் எடுபியா?) கொலைகளை நிறுத்த வேண்டும்.
இல்லையேல் நாட்டை விட்டு ஓட வேண்டுமென ஒரு உன்மையை சொன்னேன். தலைவா சங்கரி, மகிந்தாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு கடுதாசி போட்டவர் அதை படித்திருந்தால் இந்த வியாக்கனம் வந்திருக்காது. தற்ப்போது தோழரின் எடுபிடிகள் 20 தமிழருக்கு மேல் தடுப்பு காவலில் வைத்திருக்கிறார்கள். இவர்களைவிட இவர்கள் கேக்கும் தொகை பல லட்ச்சம். இது டக்ளஸிக்கும் தெரியும். இதில் ஒருநாள் முதல்வன் விளையாட்டு போல் ஒரு அறிக்கை விட்டுள்ளார். தமது அமைப்பு ஏதாவது தவறு செய்தால் தனக்கு உடன் போன் செய்யும்படி. அது சரி இதே தோழர்தானே மகிந்தாபுர என யாழில் பேர் வைக்க புறப்பட்டவர். இவர் வேண்டுமாயின் தனது பெயரை டக்காபச்ஜா என வைக்கலாம். ஆனால் ஒரு ஊருக்கு தனது நன்றி கடனுக்கு பெயர் மாற்றம் செய்ய நினைத்தது எப்படி இருக்கெனில். எனது குழந்தைக்கு சுகம்வர பக்கத்து வீட்டான் பெண்டாட்டிக்கு திருப்பதிக்கு மொட்டைபோட நினைத்ததுபோல் இல்லையா?? நாம் ஒன்றும் நல்லமீனுக்கும் நாறமீனுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அல்ல.
தொடரும் பல்லி…
anathi
ஜயா டக்ளஸ் பதில் சொல்லுவீங்களோ?
பல்லி கடத்தப்பட்டுள்ள 20 பேரும் யாரென சொல்ல முடியுமோ?
palli
பல்லி சொல்வதை விட உம்முடைய ஐயா வரட்டும். பகிரங்கமாக எனது முகம் காட்டி அவரிடம் யாரென சொல்கிறேன். உமது ஐயாவை
(எமது பாதுகாப்புகருதி) புலம் பெயர் தேசத்தில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்து அதில் அவரது அமைப்பு செய்யும் நல்ல பணியை சொல்ல சொல்லுங்கள். அதில் நாமும் அவரது வண்டவாளத்தை சொல்லுகிறோம். சில காலங்கழுக்கு முன்பு அவர் இங்கு வந்த போது அவருக்கு பாதுகாப்பு கொடுத்த முட்டள்களில் நானும் ஒரு குரங்கன். பளய நட்ப்பு அவரது நாடகத்தை எம்மால் புரிய முடியவில்லை.
மனோ கனேசனிடம் பலர் தமது உறவுகளை கானவில்லையென முறைப்பாடு செய்துள்ளனர்.அதில் புலி; அரசு; இவைகளைவிட ………. மீதுதான் புகார்கள் அதிகம்
தொடரும் பல்லி..
//பல்லி கடத்தப்பட்டுள்ள 20 பேரும் யாரென சொல்ல முடியுமோ?/
ஏன் போட்டு தள்ளவோ???
anathi
சில காலங்கழுக்கு முன்பு அவர் இங்கு வந்த போது அவருக்கு பாதுகாப்பு கொடுத்த முட்டள்களில் நானும் ஒரு குரங்கன்”
உங்களை யாரென்று இனங்காட்டி விட்டீர்களே!பிறகு கடத்தப்பட்டவர்கள் யாரென்று உங்களுக்கு தெரியுமோ என கேட்டால் ஏன் போட்டு தள்ளவோ என கேட்கிறீர்கள்.
தகுந்த ஆதாரங்கள் இன்றி எந்த விடயத்தையும் நம்பக் கூடாது இல்லையா?
palli
//ஏன் போட்டு தள்ளவோ என கேட்கிறீர்கள்.//
எல்லாம் சிலரின் முகம் அறிந்த அனுபவம் தான்………