சண்டே லீடர் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை செய்யப்பட்ட விதத்திலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்தக் கொலை ஊடகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொலை என குறிப்பிட்டுள்ளது.
தமிழர் பிரச்சினைக்கு இராணுவ ரீதியாகத் தீர்வு காணப்பட முயற்சிக்கும் நிலையில் லசந்த அரசாங்க பாதுகாப்புத் தரப்பு தொடர்பாகவும் ஊழல்கள் தொடர்பாகவும் செய்திகளை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் பட்டப் பகலில் அவர் கொலை செய்யப்பட்ட சம்பவமானது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.