யாழ். மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் 2009 ஆம் ஆண்டுக்கான வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் பணிகள் நடைபெறுவதாக யாழ்.மாவட்ட போக்குவரத்து திணைக்கள உதவி ஆணையாளர் எம். பத்மநாதன் அறிவித்துள்ளார். வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்களை பதிவு செய்த பிரதேச செயலகங்களுக்குச் சென்று கடந்தாண்டு வாகன அனுமதிப்பத்திரம் ,வாகன காப்புறுதிஅனுமதிப்பத்திரம் ஆகியவற்றைக் காண்பித்து புதிய ஆண்டுக்கான வாகன அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளுமாறு அவர் வேண்டியுள்ளார்.
வாகன வரி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான கால எல்லை மார்ச் 31 ஆம் திகதி வரையறை செய்யப்பட்டிருந்தாலும் முன்கூட்டியே சிரமமின்றி வாகனவரி அனுமதிப்பத்திரத்தைப் பெறுமாறு வாகன உரிமையாளரை அவர் கேட்டுள்ளார்.