2009ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை தேசிய ரீதியாக மேற்கொள் ளப்படவுள்ள தாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளுக்கு புதிதாக வருகைதரும் பிள்ளை களை வரவேற்பது தொடர்பான வைபவங்கள் நாட்டின் அனைத்து ஆரம்பப் பிரிவு பாடசாலைகளிலும் இடம் பெறவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
சமயத் தலைவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்ய ப்படுவதுடன், ஆரம்பக் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பெற்றோர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.