100 சிவிலியன்கள் அரச பகுதிக்குள் வருகை

ahathi.jpgமுல்லைத்தீவிலுள்ள புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 28 குடும்பங்களைச் சேர்ந்த 100 சிவிலியன்கள் நேற்று பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். பரந்தன், பெரிய பரந்தன், காஞ்சிபுரம் மற்றும் வட்டக்கச்சி ஆகிய பிரதேசங்கள் ஊடாகவே ஓமந்தையை நோக்கி 100 சிவிலியன்களும் வருகை தந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இந்த 100 சிவிலியன்களில் 22 சிறுவர்கள், 23 சிறுமிகள், ஆண்கள் 30, பெண்கள் 20 ஆகியோர் அடங்குவர். வழக்கமான விசாரணைகளுக்கு பின்னர் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • அயலவன்
    அயலவன்

    சில செய்திகள் – ஐரொப்பாவிலிருந்து அயலவன்

    செய்தி 1) புலிகளிடம் இருந்து தப்பிவரும் பொதுமக்கள்
    வன்னியில் புலிகளின் பிடியிலிருந்து பல பொதுமக்கள் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு மத்தியிலும் தப்பி இராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வந்துகொண்டிருப்பது பலரும் அறிந்த விடையம். புலிகளின் இரும்புப்பிடியிலிருந்து இவர்களால் எப்படி இப்படித் தப்பித்து வரமுடிகிறது என்றால்: மக்களை வெளியேறாமல் தங்களுக்கு பாதுகாப்பு அரணாக வைத்திருக்க நியமிக்கப்பட்டு, மக்களை கண்காணிக்க அனுப்பப்பட்ட பல புலி உறுப்பினர்கள் மாயமாகி மறைந்து விட்டனராம். அதாவது அவர்கள் ஆயதங்களை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனராம். அதனைப் பயன்படுத்திக்கொண்டு பல பொதுமக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் தப்பிவந்து கொண்டிருக்கிறார்கள்.

    செய்தி 2) ஓடிக்கொண்டிருக்கும் உள்@ர் பொறுப்பாளர்கள்
    புலிகளின் சில ஆயதம் ஏந்திய உறுப்பினர்கள் மாத்திரம் அல்ல, புலிகளின் சில உள்@ர் நிதிப்பொறுப்பாளர்களையும், வரிவிதிப்பாளர்களையும் காணவில்லை என்று புலிகள் தேடுகிறார்கள். சில இடங்களில் மக்களிடமும் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களை கண்டீர்களா என்று கேட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் எங்கே தப்பி ஓடுகிறார்கள் என்பதுதான் இனிமேல் மக்களின் மனதில் மாத்திரமல்ல, ஊடகங்களிலும் முதல் நிலையில் இருக்கப்போகும் வினாவாகும்.

    செய்தி 3) பாசப்போராட்டம்
    புலிகளிடமிருந்து தப்பி வருவதற்கு பலருக்கு சந்தர்ப்பம் கிடைத்தும், அவர்கள் வராமல் இருப்பதற்கு காரணம்: பந்தபாசங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழும் பாசப்போராட்டம்தான். நிம்மதியைத் தொலைத்துவிட்டு, தங்கள் குழந்தை குட்டிகளோடு ஏதோ கிடைப்பதை உண்டு, வாழ்ந்து வந்த மக்களின் வீடுகளுக்குள் கதவுகளை உடைத்தும், கூரைகளைப் பிரித்தும், பெற்றோரை அடித்து உதைத்தும், பாடசாலைக்கு வேலைத்தளத்துக்கு என்று சென்று கொண்டிருந்த போதும் பலாற்காரமாக புலிகளால் பிடித்துச் செல்லப்பட்ட தங்கள் குழந்தைகளை புலிகளிடம் விட்டுவிட்டு, அந்த பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி எதுவுமே தெரியாமல் எப்படி வெளியேறுவது என்ற பாசப்போரட்டத்தோடு புலிகளின் பிடியிலிருந்து வெளியேறாமல் தங்கள் பிள்ளைகளை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு வயதானவர்களை மட்டும் கொண்டுள்ள குடும்பங்கள் இயலாமை காரணமாகவும் வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    செய்தி 4) கைதான குடும்பங்கள்
    அரசகட்டுப்பாட்டுப்பகுதிக்கு தப்பிவரமுயன்ற சில குடும்பங்களை புலிகள் கைதுசெய்து வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

    செய்தி 5)வன்னி மக்கள் பற்றி அரசு எடுக்க எண்ணியிருக்கும் முடிவு
    வன்னி பற்றி அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவு என்று அங்கிருந்து வரும் செய்தி: முல்லைத்தீவையும் கைப்பற்றி தங்களின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வன்னியை கொண்டுவந்த பின், அங்கிருக்கும் மக்களை முழுமையாக வவுனியாவுக்கும், மன்னாருக்கும் கொண்டு வந்து அகதிமுகாமில் வைத்துவிட்டு, புலிகளை முழுக்க முழுக்க தேடி அடியோடு அழித்துவிட்டு, அதன் பின் மக்களை பயங்கராவாதத்தின் எந்தச் சுவடும் இல்லாமல் துடைத்து எடுத்த பின்னர்; மக்களை வன்னியில் மீள்குடியேற்றுவதே அரசின் தற்போதைய திட்டமாம்.

    செய்தி 6) இராணுவத்திடம் சரணடைந்த மக்களின் ஏக்கம்
    புலிகளிடம் இருந்து தப்பிவந்து இராணுவத்திடம் சரணடைந்து இராணுவத்தின் விசேட கண்காணிப்பில் வவுனியாவில் வைக்கப்பட்டிருக்கும் மக்களை இதுவரைக்கும் எந்த ஒரு தமிழ் அரசியல்வாதிகளும் (அது அரசோடு இருப்பவர்களும் சரி, அரசை எதிர்ப்பவர்களும் சரி) இதுவரை அந்த மக்களை எட்டிக்கூட பார்க்கவில்லையாம் என்பது அந்த மக்களின் ஆதங்கம்.

    செய்தி 7) புலம்பெயர்ந்து வாழும் (TELO) உறுப்பினர்கள் ஆனந்தசங்கரி அணிக்கு வலுசேர்க்கிறார்கள்?
    புலிகளின் பின்னால் நிற்கும் தங்கள் தலைமைத்துவத்தின் துரோகத்தனத்தினால் கொதித்துப்போய் இருக்கும் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்ஈழ விடுதலை இயக்க (வுநடழ) உறுப்பினர்களுக்கும், தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களுக்கும் ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. விரைவில் இருபகுதியினரும் ஐரொப்பிய நாடொன்றில் சந்தித்து உரையாட இருப்பதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலிகளின் பகுதியிலிருந்து தப்பி வந்த பொதுமக்களை புலிகளே சுட்டுக் கொன்றிருப்பது தான் கொடுமையிலும் கொடுமை. இவ்வளவு காலமும் புலிகள் பொதுமக்களை தமக்கு காப்பரண்களாக பயன்படுத்துகின்றார்கள் என்ற போது புலிகளும் புலிஆதரவாளர்களும் அதை முற்றாக மறுத்து அறிக்கை விட்டார்கள். இன்று எது உண்மை என்று புலிகளின் படுகொலைகள் மூலம் நிருபணம் ஆகிவிட்டது.

    Reply
  • ashroffali
    ashroffali

    அயலவனுடைய கருத்து புலம் பெயர் தேசத்தில் வாழ்ந்தாலும் வன்னியின் உண்மை நிலவரம் அறிந்து வைத்திருப்பவர்களும் இருக்கவே செய்கின்றார்கள் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உண்மையில் வன்னி மக்கள் தங்கள் பந்த பாசங்கள் புலிகளின் பிடிக்குள் சிக்கியிருக்கும் நிலையில் அவர்களை விட்டு வெளிவர முடியாத நிர்ப்பந்தத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றார்கள். மற்றபடி மக்கள் ஒரு போதும் புலிகளை ஆதரிப்பவர்கள் அல்ல. அதை இலங்கை ஜனநாய சோசலிசக் குடியரசின் அரசாங்கம் நன்றாகவே அறிந்து வைத்துள்ளது. அண்மையில் கூட புதுக்குடியிருப்பு மருத்துவமனையை அண்மித்திருந்த மின் கம்பங்களில் இரண்டு சிவிலியன்களின் சடலங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. விசாரித்துப் பார்த்த போது தான் அது புலிகளின் பிடியிலிருந்து தப்பியோட முற்பட்டபோது பிடிபட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்ட இரண்டு சிவிலியன்களின் சடலங்கள் என்பது தெரிய வந்தது. தங்கள் பிடியிலிருந்து தப்பியோட முற்படுகின்றவர்களுக்கு இது தான் கதி என்பதை அச்சுறுத்தி உணர்த்தவே புலிகள் அப்படிச் செய்திருந்தனர். ஆனால் என்றைக்கும் மக்களை இப்படியே அடக்கி வைத்திருக்க முடியாது.

    புலி உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது இராணுவத்துடன் ஒத்துழைக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த மோதல் முடிவுற்ற பின் புலிகளின் உயிருடனுள்ள அனைத்து உறுப்பினர்களும் புனர்வாழ்வளிக்கப்பட்டு தொழில் வாய்ப்பளிக்கப்படுவார்ககள் என்ற இராணுவத்தின் உறுதிமொழியை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அதன் காரணமாகவே புலிகளுக்கு வாய்ப்பான பிரதேசங்களிலிருந்தும் தாக்குதல் இல்லாமல் பின் வாங்கிச் செல்லத் தொடங்கி விட்டார்கள். புலிகளின் தலைவர்கள் என்னதான் மோதலைத் தொடர முற்பட்டாலும் உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அதிலும் முக்கியமான பல தலைவர்கள் இப்போதைக்கு சரணடைவதற்கான தூது அனுப்பிக் கொண்டிருப்பதாக தெரிய வருகின்றது. மேலும் அவ்வாறு சரணடைந்த ஒரு சிலர் புலிகளின் இன்றைய முக்கிய மறைவிடங்கள் நடமாடும் இடங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் செய்மதித் தொலைபேசி உட்பட இந்தியாவின் இலங்கையின் தொலைபேசி இலக்கங்கள் என்பவற்றையெல்லாம் இராணுவத் தரப்பினரிடம் தெளிவாகவே தகவல் வழங்கி விட்டனர். அந்த வகையில் எப்படிப் பார்த்தாலும் இன்னும் சில நாட்களுக்குள் புலிகள் ஒட்டுமொத்தமாகத் துடைத்தழிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம். அது மக்களின் வாழ்வில் மகத்தானதொரு பொன்னாளாக மலரும்.

    Reply
  • palli
    palli

    அரசின் உளவுபடையை விட அரசின் அம்பலவாணர்களுக்கு பலவிடயம் தெரிகிறது. புலியை ஆதரிக்க பல்லி விரும்பவில்லை. ஆனால் புலியை
    ராணுவத்தால் முடித்து விடுவோமென அரசு சொல்லுவதும். அதை நம்பி பலபிரமுகர்கள் அரசியலில் தமது முதலை போட்டு வியாபாரம் செய்ய நினைப்பதும் கருணாவுக்கு கிடைத்த எம்பி பதவி போன்ற மாயைதான். புலி என்னை மட்டும் கொல்லும். சிங்கம் என் குடும்பத்தையே கொல்லும். ஆகவேதான் மக்களே தமது முடிவை எடுப்பது நல்லது.
    பல்லி

    Reply