ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷன் நேற்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவிசாவளை வீதியில் இவர் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகியதை அடுத்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மனோகணேஷனுக்கும் ஏனைய மூன்று பேருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
கொழும்பு ஹட்டன் வீதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மனோ கணேசன் பயணம் செய்த “மொன்டரோ’ ரக ஜீப் மோசமான விபத்தில் சிக்கி பலத்த சேதமடைந்துள்ளது. ஹட்டனில் நடைபெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் நுவரெலியா மாவட்ட முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.