ராஜபக்சே கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்தான் தமிழர்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நாளாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் வெல்ல முடியாது என்று ஈரோட்டில் நடந்த ம.தி.மு.க தேர்தல் நிதியளிப்பு விழாவில் பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்படுகிறார்கள். 4 ஆண்டுகளாக இந்திய அரசு இலங்கை அரசுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்து வருகிறது. அதனால் தான் இந்த அளவு பாதிப்பு இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது. மத்திய அரசின் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிகளும் இலங்கை தமிழர் விரோத போக்கை கண்டுகொள்ளவில்லை. ஹிட்லர் ஆட்சியில் கூட நடக்காத கொடுமை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது. இதைத்தான் சினிமா இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் பேசினார்கள். இதில் என்ன தவறு உள்ளது?.
போபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்சினையில் இருந்து விடுபட ராஜீவ் காந்தி இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பினார். ராணுவம் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது. இதை சீமான் சொன்னதில் என்ன தவறு உள்ளது? தற்போது ராணுவ உதவி மட்டுமின்றி உளவு அமைப்பான ரா மூலமும் இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு உதவி செய்து வருகிறது. இந்தியா கொடுத்த பணத்தில் ஆயுதம் வாங்கி இலங்கை அரசு நம் இனத்துக்கு எதிராக பயன்படுத்துகிறது.
உண்மையில் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவில் உள்ள 6 லட்சம் தமிழர்களுக்கு அரணாக உள்ளனர். அவர்களை வீழ்த்த முடியாது. ராஜபக்சே கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்தான் தமிழர்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நாளாகும் என்றார் வைகோ.
nagan
இனி உங்களுக்கு எங்கட பணம் வராதெல்ல அதுதான்…..
உங்களுக்கு சாப்பாடென்ன எதுவுமே செரிக்காது.
anathi
ராஜபக்சே கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்தான் தமிழர்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நாளாகும்.
அப்படியென்றால் சமியாக் குணத்திலேதான் துள்ளிக் குதிக்கிறீர்கள்.
பார்த்திபன்
அதுசரி வைகோவிற்கு மட்டும் எப்படி வன்னிச் சனம் 21/2 இலட்சம் என்பது 6 இலட்சமாகப் பெருகியது. அம்மாவுடன் நின்று வீரம் பேசும் வைகோ பேசாமல் கள்ளத்தோணியில் வந்து தனது கைங்கரியத்தைக் காட்டலாமே??
Anonymous
அண்ணன் வைக்கோ அவர்களே!, உங்களுடன் நான் காரில் அமர்ந்து ,வாசலில் கிட்டு லுங்கியுடன் ஒருகாலில் நின்று வரவேற்க, “அவர்” வீட்டில் விட, இறங்கு முன் நீங்கள் கேட்டீர்கள், மாத்தையா என்றால் யார், அவர் என்ன படித்திருக்கிறார் என்று. இந்தியாவில் சிங்களவர்கள் இல்லை, தமிழர்களும் சிங்களவர்களும் நமக்கு ஒன்றுதான், இருவருடைய பிரச்சனையும் தீர பிரார்த்திப்போம்… மற்றப்படி நீங்கள் சொல்லுவது ரொம்பவும் ஓவரா தெரியல்ல??….
Vanniyan
WHAT A JOKE FROM VAIYAPURI KOPALASMI. IT’S FUN BUT EXPIRED EMOTIONIC WORDS.
padamman
சைக்கோ போல் கதைக்கவேண்டம் வைக்கோ அவர்களே “ஹிட்லர் ஆட்சியில் கூட நடக்காத கொடுமை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது” உண்மை தான் வன்னியில் அப்படித்தான் நடந்தது நடக்கின்றது இனிமேல் நடைபெறமல் இருப்பதற்கு ஈழத்தமிழர் ஆகிய நாங்கள் முயற்சி செய்கின்றோம் நிங்கள் முடிந்தால் ஹிட்லர்ரை காப்பற்ரவும்.
ashroffali
வைக்கோவை ஒன்றும் சொல்ல வேண்டாம். பாவம். வாங்கின காசுக்கு விசுவாசத்தைக் காட்ட வேண்டாமா? ஏதோ வயித்துப் பிழைப்புக்காக அடியேன் தொரியாமல் தவறு செய்து விட்டேன் என்று அவராக ஒரு நாள் மனமுருகி மன்னிப்புக் கேட்பார். அதுவரை பொறுத்திருப்போம்.
chandran.raja
யாராவது ஒரு முக்கியஸ்தரின் பெயரால் “யூஸ்”குடித்து உண்னாவிரதத்தையும் முடித்து வைப்பார்கள். உலகம்பூரா பரவியிருக்கும் தமிழ் மக்கள் இதையும் நம்பலாம். ஆனால் எப்போது?