அமெரிக்கா ஜனாதிபதி வேட்பாளர்கள், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை கவர கடும் பிரயத்தனம்!

அமெரிக்காவில் நவம்பரில் ஜனாதிபதி தேர்தல்  நடக்கவிருக்கிறதுகிறது. ஜனாதிபதி  ட்ரம்ப் 2-வது முறையாக குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் இதே கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையில், ஜனாதிபதி  ட்ரம்ப் இந்திய பயணம் மேற்கொண்ட போது பிரதமர் மோடியும் ட்ரம்பும் அகமதாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினர். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை கவர பிரதமர் மோடியின் உரை அடங்கிய அந்த வீடியோ ட்ரம்ப் தேர்தல் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் வைரலாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதே நிலையில் முன்னதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை கவர  ஜனநாயகக் கட்சி  ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் எல்லாத் தடைகளையும் தாண்டி, ஞானத்தால் ஆசிர்வதிக்கப்படுவீர்கள்” என்று பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *