புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் பொங்கல் விழாக்கள் யாவும் நிறுத்தம்

ponkal.jpgவன்னியில் தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் பாரிய படை நடவடிக்கையால் தமிழ் மக்கள் தாங்கொணா வேதனைகளை அனுபவித்து வருவதால் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் நிறுத்துவதாக புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்புகள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக ஐரோப்பிய, அவுஸ்திரேலிய, கனடா மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள வேண்டுகோளில் “வன்னியிலுள்ள தமிழ் மக்கள் மீதான இராணுவத்தின் இன அழிப்புத் தாக்குதலைத் தடுக்கக்கூடிய அழுத்தம் தமிழ் நாட்டிலிருந்து மட்டுமே வரமுடியும். இலங்கையில் நடத்தப்படும் இனதேசியப் போரானது புதுடில்லியின் மூலோபாயத்திலும் அதன் உலகப் பங்காளிகளின் தந்திரோபாயப் பங்களிப்புடனும் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தின் மீது கொண்டிருந்த மிகச் சிறிய நம்பிக்கையையும் இழந்துவிட்டனர். இலங்கைப்படைகள் கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர் அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளே அவர்களையும் அவர்களது புவிசார் நலன்சார் செயற்பாடுகளையும் அம்பலப்படுத்திவிட்டன.

இலங்கையின் அகோர போர் வெறியினால் வன்னியிலே மக்கள் தாங்கொணா வேதனையை அனுபவிப்பதால் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளன.
 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • thurai
    thurai

    தொலைக்காட்சிகளில், சினிமாவும், தொடர்நாடகஙளும். ஒவ்வொரு நாட்டிலும், தமிழகச் சினிமாக்காரர்களின் வ்ருகைகள். இவற்ரினால் வரும் வ்ருமானங்களே போதும் போல இருக்கின்றது. பொங்கல் பானையும் வாழையிலையும் விற்பதால் வரும் வருமான்ம் தேவையில்லைப் போலும்.

    துரை

    Reply
  • anathi
    anathi

    தனக்கு தனக்கு என்றால் சுளகும் படக்கு படக்கு என அடிக்குமாம். தமிழர்கள் மேலுள்ள கவலை கரிசனையாலா பொங்கல் விழாவை நிறுத்தியுள்ளார்கள். தலைவருக்கு அங்க வயிற்றாலை போகுது என்ற விசுவாசத்திலைதான். குறைந்த பட்சம் 86ம் ஆண்டிலாவது ரெலோவை றோட்டில் போட்டு போகிப் பண்டிகை நடத்திக் காட்டும்போது இதை செய்திருக்க வேணும்.

    Reply
  • lavan
    lavan

    “புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்பு” இப்படி ஒரு அமைப்பு இருக்கின்றதா?
    புலிகள் இப்படி எத்தனை பெயர்களில் வலம் வருவர்களே தெரியவில்லை.

    Reply
  • kanapathi
    kanapathi

    கிறிஸ்துமஸ் இனிச்சதாக்கும் ………..
    புத்தாண்டு இனிச்சதாக்கும் ………
    பொங்கல் ஒண்டுதான் கசக்குது போல கிடக்கு

    Reply