மே.இ.தீவுகளில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டித் தொடரில் நேற்று தனது 500வது டி20 விக்கெட்டை வீழ்த்தினார் டிவைன் பிராவோ. ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணிக்கு பிராவோ ஆடுவது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 459 போட்டிகளில் 501 விக்கெட்டுகளை எடுத்து பிராவோ சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் மலிங்கா 295 போட்டிகளில் 390 விக்கெட்டுகளுடன் இருக்கிறார். சுனில் நரைன் 339 போட்டிகளில் 383 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 295 போட்டிகளில் 374 விக்கெட்டுகளையும் பாகிஸ்தானின் சொஹைல் தன்வீர் 339 போட்டிகளில் 356 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.