திருமாவளவனின் உண்ணாவிரதம் இன்று காலையே தொடங்கும்

thiruma.jpgஈழத் தமிழர்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று புதன்கிழமை நடத்தவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் பொலிஸாரின் அனுமதி மறுக்கப்பட்டதனால் இன்று வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னர் தீர்மானிக்கப்பட்ட இடமான சென்னை விருந்தினர் மாளிகைக்கு எதிரில் இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கவுள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் எங்குமிருந்து இளஞ் சிறுத்தைகள் பாசறையைச் சேர்ந்த இளைஞர்கள் சென்னையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தமிழகம் எங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புகளும் இதில் கலந்து கொள்ள சென்னைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • padamman
    padamman

    எப்படியும பழச்சாறு கொடுத்து இந்த உண்ணாவிரதத்தை நிறுத்துவர்கள் என்ற நம்பிக்கையில் தோல் திருமாவளவன் இருக்கும் உண்ணவிரதம் எல்லாம் வேண்டிய பணத்துக்காக நடைபெறும் உண்ணவிரதம் என்று எல்லோருக்கும் தெரியும்.

    Reply
  • gobi
    gobi

    திலீபன் போல் சாகும்வரை உண்ணாவிரதம் இவர்கள் இருக்க மாட்டார்களா??

    Reply
  • lavan
    lavan

    இது பணத்துக்காக என்று எங்களுக்கு தெரியும் கடைசிவரை யாரும் யுஸ் குடுக்காமல் விட்டால் தான் பிரச்சனை மன்னன் படத்தில் கவுண்டமனி போல் என்ரா இந்த உண்ணவிரதம் என்றகிவிடும் பார்ப்போம் இன்னும் எத்தனை நாள் என்று? இந்திய அரசியல்வாதிகளைப்பற்ரி எங்களுக்கு நன்றக தெரியும் அதுவும் தமிழநாட்டு அரசியல்வியபாரிகளைபற்ரி நன்றகவே தெரியும்.

    Reply
  • thurai
    thurai

    ஆயிரக்கணக்கில் உலகமெங்கும் புலிகளிற்கு கொடியேந்தியவர்கள் எங்கே? ஆயிரக்கண்க்கில் புலிகளிற்கு பணம் சேர்த்தவர்கள் எங்கே? நீங்களெல்லாம் ஒருநேரம் த்ண்ணீர் கூடக்குடிக்காமல் இருக்கமாட்டீர்கள். உங்களில் யாராவது தமிழகத் தலீத்துக்களின் தனித் தலைவனைக் காப்பாற்றுவீர்களா?

    துரை

    Reply
  • Thaksan
    Thaksan

    திருமாவளவன் அண்ணை சபாஸ். விடக்கூடாது உண்ணாவிரதத்தை எண்டு சொல்லி உங்களை சாகக்குடுக்க எனக்கு இஸ்டமில்லை. ஆனால்> இனியாவது புரிந்துகொள்ளுங்க உங்கட பம்மாத்துகளெல்லாம் எல்லாருக்கும் தெரியும். வடிவேல் ஒரு சினிமா படத்தில் சொல்லுவார் ” உசுப்பேத்தி உசுப்பேத்தியே என்னை ரணகளமாக்கீடாங்கள்” என்று. தானைத் தலைவரும் இப்ப அதையேதான் சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கிறாராம். தயவு செய்து உசுப்பேத்துற வேலையை இனியாவது கைவிடுங்க. ரணகளத்தின் வேதனையை அனுபவித்தால்த் தான் தெரியும். வெளிநாடுகளிலும் கொழும்பிலும் இருந்துகொண்டு உசுப்பேத்தி உடுக்கடிக்காமல் இருங்க. பாவம் மக்கள்.

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    another great action comedy

    Reply
  • ashroffali
    ashroffali

    மக்களுக்காக என்று வாய் தவறிக் கூறினாலும் புலிகளுக்காக என்பதே மெய். ஆனால் உண்ணாவிரதமிருக்கச் சொன்ன உங்கள் பிரபாகரனிடம் எத்தனை நாள் உண்ணாவிரதம் என்று கேட்டுக்கொண்டீர்களா திருமாவளவன்? இல்லாவிட்டால் உங்கள் பாடு அம்போதான். பிரபாகரன் இராணுவத்தினரிடம் பிடிபட்டாலோ அல்லது நாட்டை விட்டுத் தப்பியோடி விட்டாலோ உண்ணாவிரதத்தை முடிப்பதற்கான கட்டளை அவரிடமிருந்து கிடைக்காமல் உங்கள் பாடு திண்டாட்டமாகி விடும். எப்படியிருந்தாலும் உங்கள் உண்ணாவிரத நாடகம் உங்களுக்கு கெட்ட பெயரையும் அவமானத்தையும் தான் சம்பாதித்து தரப் போகின்றது. ஆனாலும் அண்மைக்காலம் வரை வெறும் துவிச்சக்கர வண்டியில் சுற்றிக் கொண்டிருந்த உங்களுக்கு நவீன மோட்டார் வண்டிகளில் பவனி வருவதற்கான வசதி புலிகளின் நிதியுதவி காரணமாகவே வந்தது. அந்த வகையில் உங்கள் நன்றிக் கடனை செலுத்த இதுவும் ஒரு வழியாக உங்களுக்குப் பயன்படலாம். அதற்காக இப்படியொரு வலிந்த அவமானத்தைத் தேடிக்கொள்ள எப்படி நீங்கள் ஒத்துக் கொண்டீர்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இதற்குத் தான் கெட்டவர்களுடன் சகவாசம் கூடாது என்று பெரியார் ஈ.வெ.ரா அப்போதே கூறி வைத்து விட்டுச் சென்றார். பெரியாரின் சீடனாக உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிலையில் பெரியாரின் போதனைகளை கொஞ்சமாவது படித்துப் பார்த்திருக்கக் கூடாதா?

    Reply
  • rooto
    rooto

    அண்ணா அஸ்ரொப் சொல்லுறாரு கேளுங்க!! அவர்தன் சொல் வேந்தராச்சே, சமூகசேவையாளரே, தன்னுயிரை கொடுத்தாவது மக்களுக்கு ஜனநாயக தீர்வு பெற்றுதர முன்னிற்கும் ஒருவர்!!!

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    தியாகதீபம் திலீபன் மூட்டிய அகிம்சை தீ ராஜீவின் போலி அமைதி முகமூடியை கிழித்து ஈழவிடுதலை போராட்ட அழிப்பு என்ற கோரமுகத்தை ஈழத்தமிழர்களுக்கு காட்டியது. அன்னை பூபதியின் தியாகம் இந்தியபடையை அடித்துரத்துவதை தவிர வேறு வழி ஈழதமிழர்களிற்கு இல்லையென்று உண்மையை தெளிவுறவைத்தது. திருமாவின் உண்ணாவிரதம் ஈழதமிழர் அழிப்பின் பிரதான உபயகாரர் இந்தியா என்ற உண்மையை தமிழக தமிழருக்கு உணரவைத்து காங்கிரசை தமிழகத்திலிருந்து காவுவாங்குவது மட்டுமல்ல சிங்களத்திற்கான இந்தியாவின் கட்டற்ற போர்உதவி இல்லாது போய்விடுமோ என சிங்களவிசுவாசிகள் கலங்கிநிற்பதை பின்னூட்டங்கள் காட்டுகின்றன! மொத்தத்தில் 20 வருடங்கள் கழித்து மீண்டுமொரு 1989 ஈழத்தில் அரங்கேறவுள்ளது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பசியின் அருமையும் உயிரின் பெருமையும் அறிவால் அறிந்து உணரவேண்டும். உணரமுடியாதவர்கள் பட்டேஉணரமுடியும். இந்தவகையில் இது நல்ல சந்தர்ப்பமே! தொல்.திருமால்வளவனும் பிரபாகரனும் இந்த இரண்டையும் உணராதவர்களே!!
    உணர்ந்திருந்தால் போராட்டம் வேறு கோணத்தை எட்டியிருக்கும். இவர்கள் போராட்டம் என்றும் மக்கள்நலனோ மக்கள் தேவையையோ பிரதிபலிப்பதல்ல. எல்லாம் சுயநலமும் பதவியாசையும் தான். தமிழ்மக்கள் என்று சொல்லவதெல்லாம் வெறும் பம்மாத்து என்பதை மக்கள் உணர்ந்து வெகுகாலம் ஆகிவிட்டது. இல்லாவிட்டால் எமது சிறுசுகள் முற்றதில் சைக்கிளில் ரவுண்டடிப்பதையும் கயிறுயடிபது போன்ற ஆசைகளை மறுதலித்து போர்முனைக்கு கொண்டு சென்று பலி கொடுத்திருப்பார்களா என்னா? திருமால்வளவனின் நோக்கம் வேறு வகையானது. திலீபனைப்போல் இறக்கமாட்டார் இவர். தேர்தலுக்கு முன் “யூஸ்” குடித்து உங்களுக்கு முன் எழுந்து நிற்பார் இவர்.

    Reply
  • palli
    palli

    நடிப்புக்குகூட இப்படி ஒரு விடயத்தை எம்மவர் செய்ய முடியவில்லை. மகிந்தாவுக்கு எத்தனை … கொட்டுகிறது என்பதை ஆராயாமல் எமது இனம் அழிவதை தடுக்க முயல்பவர்களை (நடிப்பாக இருந்தாலும்) கேலி செய்ய நாம் யார் என உங்களது வீட்டில் உள்ள அங்கதவரிடம் கேளுங்கள். திருமனவாளன் புலியை ஆதரிப்பதாக ஆன்மகனாக சொல்லுகிறார். அதை கேலி செய்யும் நீங்கள் யாரை ஆதரிகிறீர்கள் என சொல்லுங்க பார்க்கலாம். …………. இப்படிபட்ட பேச்சுக்கள்தான் புலிகளை மக்கள் ஆதரிக்க காரனம்………………
    பல்லி தொடரும்..

    Reply
  • msri
    msri

    புலிகளையும்> திருமாளவனின் புலி ஆதரவு என்ற ஓன்றையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் >விஞசி நிற்பது வன்னிமக்களின் அபிலாசைகளை உள்ளடக்கிய ஓர் உணர்வுபூர்வமான அகிம்சைப் போராட்டமே! ஓரு அயல்நாட்டவர் எம்மக்களுக்காக முன்னெடுக்கும் ஊணர்வுபூர்வமான ஓர் போராட்டத்தை கிணடலடித்து கொச்சைப்படுத்தக்கூடாது. இது தமிழகமக்களை அவமானப்படுத்தும் ஓர் நடவடிக்கையே! இழந்த தமிழகமக்கள் ஆதரவை இப்பேர்ப்பட்ட நிகழ்வுகள் மூலமே பெறவேண்டும். புலிகள் வேறு தமிழமக்களின் அபிலாசைகள் வேறு.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பல்லி இது தெரியாமல இவ்வளவு காலமும் பின்னோட்டம் விட்டுகொண்டிருக்கிறீர். திருமால்வளவன் புலிகளை ஆதரிக்கிறார். புலிகளின் தலைமையை ஆதரிக்கிறார். நிச்சியம் தமிழ்மக்களை அல்ல. மற்றவர்கள் எதை ஆதரிக்கிறார்கள் என்று கேட்கிறீர்கள்.

    யுத்தத்தை எதிர்த்து ஆதரிக்கிறார்கள். புலிகளைளையும் தலைமைகளையும் அழித்து ஒழிக்காமல் யுத்தம் நிறுத்தப்படுவது சாத்தியம் இல்லை என இவ்வளவு கால அனுபவமும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

    ஆயுதம் வெடிகுண்டு கொலைகள் தான் போராட்டம் என ஒரு மாயை நீண்டகாலமாக கட்டவிழ்து விடப்பட்டிருக்கிறது. இந்த மாயை மாற்றியாக வேண்டும். மாற்றி எழுதப்பட்டாக வேண்டும். இது புலிகள் அழிவில் தான் சாத்தியம். புலிகளின் அழிவோடு யுத்தவிமானம் தாக்குதலுக்கும் குண்டு போடுவதற்கும் பறக்காது என நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன்.

    Reply