புலிகளின் 5ஆவது விமான ஓடுபாதையையும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத்தின் 632ஆவது படையணி இரணைமடுக்குளத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விமான ஓடுபாதையை நேற்று மாலை கைப்பற்றியுள்ளதாகவும், இந்த விமான ஓடுபாதை 50 மீற்றர் அகலமும், 1000 மீற்றர் நீளமும்; கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடர்ந்த காட்டுப் பகுதிக்கு நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் மேற்படி விமான ஓடுபாதையைச் சுற்றி பதுங்கு குழிகளும், பாதுகாப்பு அகழிகளும் வெட்டப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.