ஈழத் தமிழரைப் பாதுகாக்க கோரி சென்னை மறைமலை நகரில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள திருமாவளவன் நிருபர்களிடம் பேசிய போது, ஈழத்தில் தமிழ் மக்களை கொன்று குவிக்கும் செயலில் இறங்கியிருக்கிறது சிங்கள இராணுவம். இதைக் கண்டித்து இலங்கை கிரிக்கெட் அணியுடனான சுற்றுப் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மும்பை குண்டுவெடிப்பில் ஈடுபட்டது பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பதால் அந்த நாட்டுக்கு செல்ல இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது.
அதேபோன்று இப்போது, ஈழத்தில் தமிழ் மக்களை கொன்று குவிக்கும் செயலில் இறங்கியிருக்கிறது சிங்கள் ராணுவம். இதைக் கண்டித்து இலங்கை கிரிக்கெட் அணியுடனான சுற்றுப் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.