கொரோனா பரவ ஆரம்பித்த காலம் முதலே சீனா அரசின் மீது அமெரிக்காவும் அதன் சார்பு நாடுகள் அனைத்தும் தம்முடைய எதிர்ப்பை காட்டி வரும் நிலையில் இது பனிப்போராக உருமாறியுள்ளது.
இந்நியைில் இந்திய பசுபிக் பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியதால் அமரிக்காவின் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள சீனத் தொடர்பாடல் – நிர்மாண நிறுவனத்துடன் தொடர்புகளை வைத்திருக்கும் இலங்கை, இதுதொடர்பில் மீள் பரிசீலினை செய்ய வேண்டுமென அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
குறித்த நிறுவனத்தினாலேயே கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல்வேறு நிர்மாணப் பணிகள் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிர்மாண நிறுவனம் இந்திய பசுபிக் பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதுடன், சுற்றாடல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இவ்வாறான முறைகேடுகள் மற்றும் இறையாண்மை மீறலில் இருந்து நாடுகள் தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனவும் அமெரிக்காதூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.