வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரங்களுக்கான புதிய தூதுவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி புதுடில்லி, வொஷிங்டன், சென்னை, டோக்கியோ, பெய்ஜிங் மற்றும் ஒட்டோவா ஆகிய இலங்கை தூதரங்களுக்கான புதிய தூதுவர்களே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் வெளிவிவகார செயலாளராக பதவி வகித்த ரவிநாத் ஆரியசிங்க அமெரிக்காவின் வொஷிங்டனுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ளதுடன், இந்தியாவின் புதுடில்லிக்கான தூதுவராக மிலிந்த மொரகொடவும், சீனாவின் பெய்ஜிங்கிற்கான தூதுவராக கலாநிதி பாலித கோகணவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பணிபுரியும் 60 வயதிற்கு மேற்பட்ட, ஓய்வுபெற்ற இராஜதந்திரிகள் பலருக்கு நாடு திரும்பிவர வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
நியுயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவுள்ள ஷேனுகா செனவிரத்ன, ஒட்டாவிற்கான தூதுவராகவுள்ள அசோக கிரிகாகம, சுவீடனின் ஸ்டோக்ஹோம் தூதுவராகவுள்ள சுதந்தக கனேகமாராச்சி, எகிப்தின் தூதுவராகவுள்ள தமயந்தி ராஜபக்ஷ, ஹவானா தூதுவராகவுள்ள ஏ.எல்.ரத்னபால மற்றும் ஹேய்கிற்கான தூதுவராகவுள்ள சுமித் நாகந்த ஆகியோருக்கே இந்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்ளது.