நிலவில் பல மர்மங்கள் அடங்கியுள்ளதாகக் கூறப்படும் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய, சந்திரயான்-3 விண்கலம், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் திரு. ஜிதேந்திர சிங், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
சந்திரயான்-3ல், ஆர்பிட்டர் கருவி இருக்காது என்றும், லேண்டர் மற்றும் ரோவர் கருவிகள் இடம்பெற்றிருக்கும் என்றும் தெரிவித்தார். முதன்முதலில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் அனுப்பிய புகைப்படங்களில், நிலவின் மேற்பரப்பு துருப்பிடித்திருப்பதை போன்று காட்சியளிப்பதாக கூறினார். மேலும், நிலவில் இரும்புச்சத்து நிறைந்த பாறைகள் இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.