கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தமிழ் மக்கள் சார்ந்த முதலாவது நிகழ்வு

president.jpgகண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (16.01.2009) ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அரச பொங்கல் விழா எனும் தேசிய தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உட்பட ஏராளமான அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.ஜனாதிபதி அவர்கள் பொங்கல் பானையில் அரிசியிட்டு சம்பிரதாயபூர்வமாக வைபவத்தைத் தொடக்கி வைத்தார்.பொங்கல் நிகழ்வைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த விழாவின் போது பெருந்தொகையான தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். மேலும் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தமிழ் மக்கள் சார்ந்த முதலாவது நிகழ்வு இதுவென்பதுடன் கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு சாதாரண தமிழ் மக்கள் வருகை தந்த முதலாவது சந்தர்ப்பமும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அந்த விழாவின் போது ஜனாதிபதி அவர்கள் சுமார் ஐந்து நிமிடங்கள் வரையில் தமிழில் சரளமாக உரையாற்றினார். அந்த உரையின் சாராம்சம் வருமாறு:

கெளரவ மதகுருமார்களே அன்பர்களே பிள்ளைகளே.

உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள இந்தப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள இங்கு வருகை தந்த உங்கள் எல்லோரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். பொங்கல் நாள் உழவர் திருநாள். தமிழர் பெருநாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அது போல இந்த வருடம் இந்து மக்கள் அனைவருக்கும் நிச்சயமாக நல்ல வழி பிறக்கும் என உறுதியாக நான் நம்புகின்றேன்.

இந்த நாட்டில் வாழும் எல்லா இன மக்களும் சந்தேகமில்லாமல் பயமில்லாமல் வாழக் கூடிய சூழ்நிலை நிச்சயமாக வெகு விரைவில் உருவாகும். எமது அரசியல் யாப்பில் உள்ளபடி எல்லா மக்களும் சம உரிமையோடு சமத்துவமாக வாழ வேண்டும். அந்த நிலையை நான் நிச்சயமாக உருவாக்குவேன். இந்த நாட்டின் எந்தப் பகுதியில் வசித்தாலும் நாம் எல்லோரும் இந்த நாட்டு மன்னர்களே. இன மத பேதம் எதுவுமில்லை. நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள். எல்லா மக்களையும் பாதுகாக்க வேண்டியது எனது பொறுப்பு எனது கடமை. நான் அதை உறுதியாக செய்வேன்.நாட்டு மக்கள் எல்லோருக்கும் ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும். மீண்டும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • ashroffali
    ashroffali

    ஜனாதிபதியே எங்களுக்கிடையில் இன மத பேதம் இல்லை என்றும் நாங்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்றும் அழகாக வலியுறுத்தியிருக்கும் நிலையிலும் அரசாங்கத்தையும் ஜனாதிபதி அவர்களையும் இனவாதக் கண்ணோட்டத்துடன் விமர்சிப்பவர்கள் குறித்து பரிதாபப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

    அதே நேரம் புலிகளின் அபிமானிகளே… என்றைக்காவது உங்கள் தலைவர் பிரபாகரன் இப்படி இன நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் பேசியதுண்டா? அதிலிருந்தே யார் இனவாதி என்பது விளங்குகின்றதா?

    Reply
  • msri
    msri

    கசாப்புக்கடைக்காரனும் கிழமையில் ஓர்நாள் ஆண்டவனை கும்பிட கோவிலுக்கு போறவன்தானே! வன்னிமக்கள் பசியாற ஒருநேரம் சாபிட்டு எவ்வளவுகாலம் இருக்கும் வீடுவாசலே இல்லை. மழையினால் வெறும் தரையில்கூட படுக்கவென்ன இருக்கவே முடியவில்லை. மகிந்தாவின் பச்சை இனவெறிக் கோரத் தாண்டவத்தால் பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியோர்வரை லட்சக்கணக்கில் பரதேசிகளாக அலையவிட்டு அதில் இன்பம் காண்கின்றார்! குண்டு மழை பொழிந்து நாளாந்தம் வன்னிமக்களை வதைக்கன்றார்> சாகடிக்கின்றார். இப்பேரினவாதக் கொலைகாரன் முதல்முறையாக பொங்கல் பானையில் அரிசி போட்டு நாங்கள் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் என்று சொல்லவதைக் கேட்டு மகிந்தாவும் இனவாதியில்லையென ஆனந்தக் கூத்தாடுவோரை பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும!

    Reply
  • Thaksan
    Thaksan

    பானையின் வாயை தமிழ் மக்களென ஒரு குறியீட்டுக்கு எடுத்துக் கொண்டால் மகிந்த வாய்க்கரிசி போடுகிறார்; கீழே பானையின் அடியில் புலிகள் கொள்ளி வைத்து தீயிடுகிறார்கள். இது தான் இன்றைய தமிழர்களின் உண்மை நிலை.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிகளின் அழிவில்லிருந்து தான் தமிழ்மக்களின் ஜனநாயகத்திற்கான போராட்டமும் சமாதானமும் பிறக்கமுடியும் எனக்குகூறி வருகிறேன். வன்னி மக்களின் துன்பமும் துயரமும் கணக்கிடப்பட முடியாதவை வர்ணிக்க முடியாதவை. இது 1944-45 ஜேர்மனி மக்கள்பட்ட துன்பத்திற்கு ஒப்பானவை. புலிகளுக்கோ பிரபாகரனுக்கோ வன்னி மக்களின் வாழ்வில் உண்மையான அக்கறையிருந்திருந்தால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். தமிழ் போராட்டத்தை சிதைத்தவனுக்கும் கொலை ஒன்றே அரசியல் ஆயுதமாகக் கொண்டவனுக்கும் இந்த எண்ணம் வராதது புரிந்து கொள்ளக்கூடியதே! இன்னும் சிலவாரங்களில் வன்னி மக்களின் துன்ப துயரங்கள் நீங்கி முப்பது வருடங்களுக்கு முன்னிருந்த நிலைமைக்கு திரும்பி வருவார்கள். இலங்கையில் பிரபாகரனை முழுமையாக புரிந்து கொண்டவர்கள் ஒரு சிலரே அதில் மகிந்தா ராஜயபக்சாவும் டக்கிளஸ் தேவானந்தாவும் குறிப்பிடத்தக்கவர்கள். இவாகள் காலடி நிச்சயம் வன்னிமண்ணில் பதிக்கப்படும். வன்னிமக்கள் எதையும் கேட்டுப்பெறுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. ஆனால் பிள்ளை செல்வங்களை இழந்தவர்களுக்கு?

    Reply
  • accu
    accu

    ஜனாதிபதி இன மத பேதம் இல்லை என்று சொல்லி விட்டார் என்பதாலோ அன்றி தமிழில் பேசுவதாலோ தமிழருக்கு இனி ஒரு பிரச்சனையும் இல்லை என்று கருதக் கூடாது அதேபோல் இன்று வன்னியில் நடக்கும் மனிதப் பேரவலத்துக்கு காரணம் புலிகள் தான் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது. இது அரசோ அன்றி அரசு சார்ந்த தமிழ்க்கட்சியினர் கூறியதால் நான் சொல்லவில்லை பாதிப்படைந்த பாதிப்படைந்து கொண்டிருக்கிற பலர் தம் வாயால் கூறக்கேட்டிருக்கிறேன். இந்த உண்மை புலி ஆதரவாளர்களுக்கும் நிச்சயமாகத் தெரியும். ஜனாதிபதி தமிழருக்கு நியாயமான ஒரு தீர்வு தருவாரொ இல்லையோ என்பது அது கிடைத்த பின் தான் கூறமுடியும் அதுவரை எதுவும் சொல்லமுடியாது. ஆனால் புலிகளை முற்றாக வேரறுத்தால் அதுவே தமிழருக்குச் செய்யும் மிகப் பெரிய நன்மையாகும். அஸ்ராப் அலி அவர்களே தேசத்தில் உங்கள் எழுத்தை வாசித்து அதை நம்புவன் நான். ஏதோ நீங்கள் பொய் எழுதவில்லை என்று நான் எண்ணுகிறேன். ஜனாதிபதி செய்வார் என்று சொல்லாமல் செய்தார் என்று காட்டும் பொழுது எமது நம்பிக்கை நிச்சயமாக அதிகரிக்கும். முக்கியமாக வன்னியில் இருந்து தப்பியோடிவரும் மக்களை இயன்றளவு நன்றாகக் கவனிப்பது அதைவிட முக்கியமாய் ஏதோ நம்பிக்கையில் ஆயுதங்களைப் போட்டு விட்டு சரணடையும் புலி உறுப்பினர்களை எந்தவித கொடுமையும் செய்யாது புனர்வாழ்வு அளிக்கவேண்டும். அவர்களின் நிலையை இடையிடையே பத்திரிகைகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் அவர்கள் எல்லாம் கொல்லப்பட்டோ அன்றி சித்திரவதைக்குள்ளாக்கப் பட்டுக்கொண்டோ இருப்பார்கள் பலர் நம்புகிறார்கள். வரும் நாட்களில் பல புலி உறுப்பினர்கள் சரணடையும் வாய்ப்புண்டு. எனவே அவர்களுக்கு நம்பிக்கை ஏற்ப்படுத்துவது அவசியம்.

    Reply
  • manithan
    manithan

    pls explain me mr.msri what you mean kasapukadakaran also going one day to worship the god you mention that society who you coming to say that butcher is muslim or what is your intention your coming to criticise a comunity,mr.msri expain

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வன்னி புலிகளிடமிருந்து விடுவிக்கப்படும் போது அரசுக்கெதிராக போராடி உயிர் இழந்தவர்களின் பெற்றோரும் மணைவியரும் குழந்தைகளும் உரிய மரியாதையும் பாதுப்பையும் அரசு வழங்கும். வன்னியில் நடந்த துன்பதுயரங்களுக்கு அவர்கள் காரணம்மல்ல. இந்த மோசமான சூழ்நிலைகளுக்கு அவர்களும் பலியானார்கள் என்பது தான் உண்மை. கைதிகளையும் சரணடைந்தவர்களையும் கொல்வதோ துன்புறுத்துவதோ சர்வதேசிய குற்றங்களுக்கு ஒப்பானது. மகிந்தா ராஜபக்சா அரசு அதை புரியாதது அல்ல மாறாக அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும். இதை பல தடவை கூறிவிட்டதும் ஆகிறது.

    Reply