செம்மணி சிந்துபாத்தி இந்துமயானத்தின் பகுதிகளில் மருத்துவக்கழிவுகள் குழி தோண்டி புதைக்கப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் ,யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் நேரில் வந்து உண்மை நிலையை ஆராய்ந்துள்ளார்கள்.
குறித்த மாயான பகுதியில் பெரிய குழிகள் தோண்டப்பட்டு மருத்து கழிவுகள் நிரப்பப்பட்டிருப்பதையும் காணக்கூடியவாறு உள்ளது. இதனை மக்கள் கண்டித்து தங்களுடைய எதிர்ப்பை நேற்றையதினம் காட்டினர். இதனை தொடர்ந்து நல்லூர் பிரதேச சபை, யாழ்.மாநகர சபை உறுப்பினர்களும் வருகை தந்திருந்தோருமாக இணைந்து ஏ9 வீதியை மறைத்து போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
பொலிஸார் அங்கு வந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தியதை தொடர்ந்து சட்ட ரீதியாக இதற்கு முடிவெடுக்க வேண்டும் என வருகை தந்தோரால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞான மருத்துவ முறைகளிற்குட்பட்டு மருத்துவக் கழிகள் அழிக்கப்படாது போனால் அது எமது மண்ணை பேராபத்தை நோக்கி தள்ளும் என்பதில் சந்தேகமேயில்லை. இது தொடர்பாக வேகமாக ஒரு முடிவு எட்டப்படாது விடின் நிலை பன்மடங்கு மோசமாக வாய்ப்புள்ளது.