வட மாகாணத்தின் கல்வித்துறையுடன் தொடர்புடைய உயர்மட்ட மாநாடொன்று இன்று (16.01.2009) காலை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் இடம் பெற்றது.
இம்மாநாட்டின்போது வட மாகாணத்தின் கல்வித்துறைத் தொடர்பான விடயங்களுடன் யாழ் குடாநாட்டின் கல்வித்துறை சார்ந்த பல்வேறு விடயங்களும் மிகவும் விரிவாக ஆராயப்பட்டன. மேற்படி உயர்மாநாட்டில் கல்வித்துறை சார்ந்த விடயங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன் ஏனைய விடயங்கள் குறித்து தனித்தனியாக அடுத்தடுத்த கட்டங்களில் ஆராயப்பட்டு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் எட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.