10 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொடை பொலிஸ் நிலையத்தின் திடீர் சோதனைப் பிரிவில் பணியாற்றும் இவர் கசிப்பு உற்பத்தியாளர் ஒருவரைப் பிடித்ததாகவும் பின்னர் நீதிமன்ற நடவடிக்கை எடுக்காதிருக்க 10 ஆயிரம் ரூபாவை தனக்கு இலஞ்சமாகத் தருமாறும் கேட்டுள்ளார். இது தொடர்பாக அந்த நபர் இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு முறையிட்டிருந்தார்.
இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் ஆலோசனையின்படி அவர் தெல்கந்த நகரில் வைத்து குறிப்பிட்ட பொலிஸ் சார்ஜன்டிடம் 10 ஆயிரம் ரூபாவை செவ்வாய்க்கிழமை கொடுத்துள்ளார். அதன்போது அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இவர் புதன்கிழமை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார