புதிய அரசாங்கம் பதவியேற்ற நாள் முதல் நாட்டுக்கான 20வது திருத்தத்தை உருவாக்குவது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றது. ஒரு புறமாக 20வது திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி பயணிப்பதாக பல தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற போதிலுமு் கூட ஆளுமு்தரப்பினர் அது மக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாக மிகத்தெளிவாக கூறுவதையும் காண முடிகின்றது.
இந்நிலையில் , 20 ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்களை நாடாளுமன்றத்தில் ஆராயவும் மக்களின் கருத்தாடலுக்கு விடவும் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மை எவ்வாறுள்ளது என்பதைப் பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டமூலத்தில் உள்ள நன்மையைப் பார்த்து எதிர்க்கட்சியிலுள்ள எவரேனும் அதற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும் எனவும் அவர் இதன்போது நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
இதே நேரத்தில் இன்னுமொரு ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஸ 20ஆவது திருத்தம் பற்றி குறிப்பிடும் போது ”20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எழுதியது யார், கொண்டு வந்தது யார் என்பதை ஆலோசிக்க வேண்டிய நேரம் இதுவல்ல , 20 ஆவது திருத்தத்தில் எவருக்கேனும் சந்தேகங்கள் எழுந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என குறிப்பிட்டுள்ளார்.