நாட்டின் எதிர்கால சொத்துக்களான குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் சுமேதா ஜி ஜயசேன தெரிவித்துள்ளார். சிறுவர் பாதுகாப்பு சேவைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குழந்தைகளின் திறமைகளை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்வதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஒவ்வொரு ஜனவரி 4 ம் திகதியையும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான தேசிய தினமாக பிரகடனப்படுத்தப் போவதாகவும் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் சுமேதா ஜி ஜயசேன தெரிவித்தார்.