பாது காப்பு அமைச்சின் கீழ் www.cityzens.lk என்ற இணையத்தளத்தில் தரவுகளை பதியும்போது பிரதான குடியிருப்பாளரின் விபரங்களைத் தொடர்ந்து குடும்ப அங்கத்தவர்களின் விபரங்களையும் பதிய வேண்டும். நாட்டிலுள்ள சகல பிரஜைகளும் இதில் பதிவு செய்ய வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மேற்படி இணையத்தளத்தை தரவிறக்கம் செய்த பின்னர் பொலிஸ் பிரிவு, வீட்டு இலக்கம், வீதி, நகரம், பிரதான நகரம், வீட்டின் மாதிரி, குடியிருப்போர் எண்ணிக்கை, பிரதான குடியிருப்பாளரா? அப்படியாயின் பெயர், ஆணா? பெண்ணா?, பிறந்த திகதி, தொலைபேசி இக்கங்கள், ஈமெயில் போன்ற விபரங்களுடன் தேசிய அடையாள அட்டை, கடவுச் சீட்டு, சாரதி அனு மதிப்பத்திர இலக்கங்கள் என்பனவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.
வாடகைக்கு குடியிருப் பவர் எனில் முதலாவது பகுதியில் வீட்டின் உரிமை யாளரும், இரண்டாவது பகு தியில் வீட்டில் குடியிருப் பவரும் தரவுகளை பதிவு செய்ய வேண்டும். வீட்டின் உரிமையாளரின் அல்லது பிரதான குடியிருப்பாளரின் தரவுகளை பதிவு செய்து submit செய்தவுடன் அடுத்து வரும் பகுதிகளில் மனைவி குழந்தைகளின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒவ்வொரு பகுதியாக பதிவு செய்ய வேண்டும்.
தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்யும்போது 9 இலக்கங்களும், அதனுடன்கூடிய v அல்லது x என்ற ஆங்கில எழுத்தும் இடைவெளியில்லாமல் இருக்க வேண்டும்.
அனைவரது தரவுகளையும் பதிவு செய்த பின்னர் இறுதியில் குடும்பத் தலைவன் உட்பட அனைவரது தரவுகளும் வரிசையாக இருப்பதை கணனித் திரையில் காணலாம். இதனைத் தொடர்ந்து save என்ற பகுதியை கிளிக் செய்வதன் மூலம் பாதுகாப்பு அமைச்சின் பதிவுக்குள் தரவுகளை அனுப்ப முடியும். பிரஜைகள் அனைவரதும் பாதுகாப்பின் காரணமாகவே உடனடியாக பதிவுகளை செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.