வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வரும் மக்களை கொண்டு வருவதற்கென ஆறு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வன்னியில் இருந்து பெருந்திரளான மக்கள் வரத்தொடங்கியுள்ளதையடுத்தே இவ்வாறு பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் வவுனியா அரச அதிபருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு இ.போ.ச பிராந்திய முகாமையாளர் கணேசபிள்ளை கூறினார்.
வன்னியிலிருந்து வரும் மக்களை வவுனியாவில் உள்ள நலன்புரி முகாம்களுக்கு அழைத்து வருவதற்காக இந்த பஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருவதோடு தேவை ஏற்பட்டால் மேலும் பஸ்கள் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் கூறினார். வன்னியில் இருந்து வரும் மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அங்கிருந்து வவுனியாவில் உள்ள நலன்புரி முகாம்களுக்கு கொண்டு வரப்படுகின்றனர்.