நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் திலீபன் நினைவேந்தல் பற்றி பாராளுமன்றில் கதைக்க முற்ப்பட்டமையை பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டு தடை செய்ய முயன்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் குறுக்கிட்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சார்பாக பேசியிருந்தார்.
அங்கு உரையாற்றிய சுமந்திரன் அவர்கள்…,
“டக்ளஸ் தேவானந்தா கதைக்கும் போது எவரும் தடுப்பதில்லை . ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கதைக்கும் போது மட்டும் தடுக்கமுற்படுகிறீர்கள். ஒரு கட்சியின் தலைவராக மக்கள் பிரச்சினையை கதைப்பதற்கும் பாராளுமன்றில் குரல்கொடுப்பதற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. அவர் பேசுவதை தடுக்க எவராலும் முடியாது ” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தமிழ் அரசியல் ஆர்வளர்கள் பலராலும் பாராட்டப்பட்டிருப்பதுடன் சமூகவலைதளங்களிலும் பரவலான பேசுபொருளாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.