நெடுங்கேணி பிரதேசம் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து வவுனியா நெடுங்கேணியிடையேயான பயணிகள் பஸ் சேவை வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இப்பயணிகள் பஸ் சேவை முன்னர் புலிகளின் சோதனைச் சாவடியாயிருந்த ஓமந்தை மற்றும் புளியங்குளம் ஊடாக நடத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.