இராணுவத்தின் 57வது படையணியினர் புலிகளின் பிடியிலிருந்து இராமநாதபுரத்தை விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 571 மற்றும் 572 வது படைப் பிரிவுகள் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மேற்கொண்ட தாக்குதல்களை அடுத்தே இன்று பிற்பகல் இந்தப் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகருக்கு அடுத்ததாக முக்கிய புலிகளின் தளங்களில் ஒன்றாக இராமநாதபுரம் விளங்கி வந்தது. இராமநாதபுரம் படையினரால் விடுவிக்கப்பட்டதையடுத்து புலிகள் இயக்க உறுப்பினர்கள் முத்தையன்கட்டு காட்டுப் பகுதிகளுக்குள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.