இலங்கையில் உடனே போரை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையை அடுத்த மறைமலைநகரில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். உடல் நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமென்று திருமாவளவனிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ’’கிளிநொச்சியை கைப்பற்ற நினைத்த இலங்கை ராணுவம் பின்வாங்கும் நிலையில் இருந்தபோது அவர்களுக்கு இந்திய அரசு கடைசி நேரத்தில் ஆயுதங்களையும் படை வீரர்களையும் வழங்கி உதவியதால்தான் அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற முடிந்தது.
இந்திய அரசு இப்படி தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக பச்சைத் துரோகம் செய்து வருகிறது. எனவேதான் வேறு வழியின்றி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினோம். இது தமிழக முதல்வருக்கோ, தமிழக அரசுக்கோ எதிரானது அல்ல. இதனால் முதல்வருக்கு சங்கடம் ஏற்பட்டால் அதற்காக வருந்துகிறேன். முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் ஈழ விடுதலை ஆதரவாளர்களும் என்னுடைய போராட்டத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனை கைவிடுமாறு கூறுவதை விட அனைத்து தலைவர்களும் இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஈழ விஷயத்தில் இந்திய அரசை நிர்ப்பந்தப்படுத்த கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒருமனதான தீர்மானத்தின்படி தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்’’ என்றார்.
BC
திருமாவளவன்- கிளிநொச்சியை கைப்பற்ற நினைத்த இலங்கை ராணுவம் பின்வாங்கும் நிலையில் இருந்தபோது அவர்களுக்கு இந்திய அரசு கடைசி நேரத்தில் ஆயுதங்களையும் படை வீரர்களையும் வழங்கி உதவியதால்தான் அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற முடிந்தது.
திருமாவளவனின் முழு நோக்கமும் புலிகளை காப்பாற்றுவதே தவிர தமிழ் மக்கள் நலம் பற்றியதல்ல.
accu
திருமாவளவன், ’’கிளிநொச்சியை கைப்பற்ற நினைத்த இலங்கை ராணுவம் பின்வாங்கும் நிலையில் இருந்தபோது அவர்களுக்கு இந்திய அரசு கடைசி நேரத்தில் ஆயுதங்களையும் படை வீரர்களையும் வழங்கி உதவியதால்தான் அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற முடிந்தது.//
என்ன நடந்தது திருமாவளவனக்கு நாலாம் நாளோடு? ஆனாலும் திருமாவளவனே உங்களுக்கு ஒரு சபாஷ்! எங்கள் தேசியத்தலைவர் போல் தொண்டனை[திலீபன்] உண்ணாவிரதத்துக்கு அனுப்பி சாகடிக்காமல் நீங்களே உண்ணாவிரதத்தில் இறங்கியது போற்றப்பட வேண்டியதே. அதே நேரம் உங்கள் கோரிக்கைகளுடன் வன்னியில் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை அவர்கள் விருப்பப்படி வெளியேற அனுமதிக்கும்படி புலிகளுக்கும் ஒரு கோரிக்கையை வைத்தீர்களானால் நீங்கள் தலைவன் என்பதையும் தாண்டி மனிதனாகவும் மதிக்கப்படுவீர்கள்.