சாதியத்திற்கெதிரான போராட்டங்களும் புலம்பெயர்ந்த வேஷக்காரர்களும் : சம்புகன்

Book_Cover._._._._._. 

இன்று சிலர் வேண்டுமென்றும் சிலர் அறியாமையினாலும் சாதியம் ஒழிந்துவிட்டதென்றும் தமிழ் தேசியமே அதை முறியடித்தது என்றும் பேசுகின்றனர். இரண்டுமே பொய்யானவை. சாதியம் இன்னும் ஒழியவில்லை. அதற்கான சான்றுகள் வெளிவெளியாகவே உள்ளன. ஆயினும் சாதிய உடுக்குமுறைக்கு சாவுமணி அடிக்கப்பட்டாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். அந்த வெற்றிக்கு தமிழ் தேசியம் எவ்வகையிலும் பங்களிக்கவில்லை. அதை இயலுமாக்கியவர்கள் தாழ்த்தப்பட்ட வெகுசனங்களும் அவர்களோடு இணைந்து நின்று போராடிய நேர்மையான இடதுசாரி சனநாயக முற்போக்கு சக்திகளுமேயாவர். அதை இயலுமாக்கியது மாக்ஸிச லெனினியவாதிகளின் வழிநடத்தலின் கீழ் அவர்கள் முன்னெடுத்த வெகுசனப் போராட்டப் பாதையே.

இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்

._._._._._.

இலங்கையிலே சாதியம் மிகக் கொடுமையாக நடைமுறையிலிருந்த பகுதி யாழ்ப்பாணக் குடாநாடுதான் தென்னிலங்கையில்  அந்நியக் குறுக்கீடு நேர்ந்த சூழல் ஒரு குறிப்பிட்ட சாதியின் முழுமையன சமுதாய ஆதிக்கத்திற்கு ஆப்பு வைத்தது. எனவே தான் சாதிய ஒடுக்குமுறையைப் பல்வேறு சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் தனிக்க இயலுமாயிற்று. சர்வசன வாக்குரிமையும் குறிப்பாக 1956ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறையைப் தணிப்பதில் முக்கிய பங்காற்றினபலும் சாதியையும் சாதியச் சிந்தனையையும் ஆதிக்கத்தையும் இன்னமும் முற்றாக ஒழித்து விடவில்லை.
 
யாழ்ப்பாணக் குடாநாட்டுச் சூழல் வித்தியாசமானது அங்கே சாதியத்தின் பிடிப்பு சகல துறைகளிலும் வழுவாக இருந்தது. எனவே அங்குதான் சாதியத்திற்கெதிரான போராட்டங்கள் முனைப்பாக இருக்க நேர்ந்தது. சாதியத்திற்கெதிரான போராட்டங்களின் மையமாக யாழ்ப்பாண குடாநாடே இருந்தது என்பதில் ஐயமில்லை.

சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் என்ற நூல் 1989ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிரசுரிக்கப்பட்டது. அது இலங்கையில் சாதியத்தின் வரலாற்றுப் பிண்ணணியையும் அதற்கெதிரான போராட்டங்களையும் பொதுப்படக் கூறி அதன் அதி உச்சக்கட்டமான தீண்டாமைக்கெதிரான வெகுஜனப் போராட்டத்தின் வரலாற்றுப் பிண்ணணியையும் வளர்ச்சியையும் நிறைவையும் இந்நூல் விவாதித்து அதன் இரண்டாவது திருத்திய பதிப்பு தமிழகத்தில் வெளியிடப் பட்டதனால் இலங்கையில் என்ற சொல் நூலின் பேருடன் சேர்க்கப்பட்டது.

இந்த நூலும் எம்.சி. சுப்பிரமணியத்தின் வாழ்க்கை பற்றிய நூலொன்றும் பாரிஸிலும் லண்டனிலும் 2008 செப்ரெம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றுள் சாதியமும் அதற்கு எதிரான போராட்டமும் பற்றியதே அதிகம் பேசப்பட்டதில் வியப்பில்லை என்றாலும் பிரான்சில் நடந்த கூட்டத்தில் விமர்சனம் போதாது என்று கூறி லண்டனில் நடந்த கூட்டத்தில் விமர்சனம் எனற பேரில் சிலரால் ஏதேதோ எல்லாம் பேசப்பட்டன. அவற்றில் நூலை வாசித்து விளங்கிப்பேசப்பட்டது எவ்வளவு என்பது  அந்நிகழ்வுகளின் ‘தூ’ இணையத்தளத் தொகுப்பு மூலம் ஓரளவு தெரியவந்தது. வக்கிரமான கருத்துக்களைக் கூறியவர்களில் அரசியல் பிண்ணணியையும் புலம்பெயர்ந்ந சூழலில் அவர்களது செயற்பாடுகளையும் அறிந்தவர்கட்கு அவர்களின் வன்மை விளங்கும்.

தலித், தலித்தியம் என்ற சொற்கள் இலங்கையின் போராட்டங்களின் பயன்பட்டவையல்ல. தமிழகத்துத் தலித்தியவாதிகள் கொண்டாடுகிற டானியல் என்றுமே அச்சொல்லைத் தன் நூல்களிற் பயன்படுத்தவில்லை அவர் பஞ்சமர் என்ற சொல்லை பயன்படுத்தினார். தாழ்த்தப்பட்டோர் என்ற சொல்லே அவர்கள் தாழ்ந்தோர் அல்ல தாழ்த்தப்பட்டோர் என்ற உண்மையான நிலையை உணர்த்துகிறது என்ற அடிப்படையில் தாழ்ந்தோர் கீழ்ச்சாதி எளியசாதி பஞ்சமர் என்பவற்றாற் குறிக்கப்பட்டோர் ஆதிக்கக்காரரால் தாழ்த்தப்பட்டோர் என்ற வரலாற்று உண்மையை அச் சொல் குறிப்பிட்டதால் அதையே இலங்கையின் இடதுசாரிகள் அனைவரும் பயன்படுத்தினர் எனலாம்.
 
தலித் என்ற சொல் அடிநிலை என்பதைக் குறிப்பது அது மராத்தியிலிருந்து வந்தது. அது தமிழகத்துக்கு வருமுன்னமே சாதியத்திற் கெதிரான போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்று வந்துள்ளன.

சாதியத்திற்கெதிரான போராட்டத்தின் வர்க்கத்தன்மையை  வெட்டி விலக்குவதற்காகவே தமிழகத்தின் ‘தலித்திய வாதிகள்’ செயற்பட்டுள்ளனர் என்பது தான் வரலாற்று உண்மை. அவ்வாறு வர்க்கத் தீக்கங் செய்யப்பட்ட அரசியல் தலித் அரசியலாக வளராமல் தமிழகத்தில் சாதி அரசியலாகிப் பிளவுப்பட்டது. இப்படிப் பட்ட ஒரு தலித்தியத்தைப் புலம் பெயர்ந்து சூழலில் உள்ள சிலர் உள்வாங்கிக் கொண்டவர்.

அவர்களிற் பெரும்பாலானவர்கட்கு ஈழத்துச் சாதியமும் போராட்டங்களும் பற்றி எதுவுமே தெரியாது. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்த் தேசிய வாதத்தின் வழியில் சென்று தான் சாதியம் இன்னும் சாகவில்லை என்று கண்டவர்கள். அவர்கள் தமது தேசிய வாதத்தின் போக்கில் உள்வாங்கிய மாக்சிஸ எதிர்ப்பு இன்னமும் அவர்களை நீங்கவில்லை. அவர்களுடன் இடது சாரி விரோத வண்மம் பிடித்த சிலர் கூட்டமைத்து ‘கௌவர’ தலித்து களாகப் பம்மாத்துப் பண்ணி வருகிறார்கள்.
 
இலங்கையில் மேர்ஜ என்கிற என்.ஜி.ஓ. நிறுவனத்தின் ‘சரிநிகர் சஞ்சிகையின்’ குளு குளு அறையிலிருந்து நாள்தோறும் கணணியில் ரோஹணு விஜேவீரவின் படத்தை ஆராதனை செய்து வந்தவரான சரவணன், தனிப்பட்ட காரணங்கட்காக நவசமசமாஜக் கட்சியின் ஆதரவாளராகவும் இருந்து வந்தவர் (அக்கட்சி தலைவர் விக்கிரமபாகுவின் விடுதலைப்புலி ஆதரவு இன்னொரு விடயம்) அந்தப் பிண்ணணியிலேயே அவரது மாக்ஸிச லெனிசிச சரிநிகரில் அவரது தலித்தியாக குறிப்புகளில் மாக்சிச வாதிகளின் வரலாற்று பங்களிப்பு பற்றிய இருட்டடிப்பும் இடம்பெற்றன. இப்போது இந்த நூலை ஒரு கட்சி பிரசார நூலாக காட்ட முயன்றிருக்கிறார். இதில் அதிசயம் என்ன?

பரிஸில்  ஷோபா சக்தி இந்த நூல் எம்.சி. சுப்பிரமணியம் சாதி ஒழிப்பிற்காக எதுவுமே செய்யவில்லை என்று கூறுவதாகச் சொல்லியிருந்தார் அவர் நிச்சயமாக நூலை வாசிக்கவில்லை என்பேன் எம். சி. சுப்பிரமணியம் தீவிரவாதிகளுடன் நின்றதன் விளைவாக 1966 ஒக்டோபர் எழுச்சி தொடர்பாக தவறுகள் செய்தார். என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதே ஒழிய அவரது பங்களிப்புகள் நூலில் மறுக்கவோ மறைக்கவோ படவில்லை. 1964க்குப் பிறகு தமிழரிடையே சாதியத்திற்கெதிரான போராட்டத்தை மாக்ஸிச nலனிசிச வாதிகளே முன்னெடுத்தனர். என்பதை ஷோபா சக்தியால் ஏற்க இயலவில்லை.

மாதவியின் கருத்து நூலில் கூறப்பட்டுள்ள ஒரு அடிப்டையான உண்மையான மே நிலையாக்கம் பெற்றவர்கள் சாதிய எதிர்ப்பில் பின்நிற்பதையும் தமது சாதி அடையாளத்தை மழுப்பு நிற தன்மையையும் பற்றிய குறிப்பைத் தவறாக வியாக்கியானம் செய்கிற சமூக நீதிக்குப் போராடப் பிண்ணிற்பதைப் கூறுவது எவரையும் சமூகவிரோதிகளாகப் காட்டுகிற முயற்சி என்பது நீதியற்றது.

எல்லாரையும் மிஞ்சிய வண்மம் மு.நித்தியானந்தனுடையது. இவருடைய திருகுதாளங்கள் பற்றிச் சில ஆண்டுகள் முன் புதிய பூமியில் எமுதப்பட்ட பிறகு பதில் கூற வக்கில்லாமல் தனது உளறல்களை சில காலம் அடக்கியிருந்த இவர் இப்போது மறுபடியும் விஷம் கக்கத் தொடங்கியிருக்கிறார்.

இந்திய தலித்தியவாதிகள் பற்றிய சிவசேகரத்தின் குறிப்புகள் வஞ்சக நோக்க முடையவை என்று கூறி தலிக் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் சுய கௌரவத்தை சிறப்பாக வலியுருத்துகிற பதம் என்று சொல்லியிருக்கிறார். அச்சொல் தாழ்நிலையில் உள்ளவன் என்ற கருத்துடையது. என்று அவருக்கு ஒருவேளை தெரியாது.

ஒரு சிரேஷ்ட விரிவுரையாளராக வரக்கூடிய போதிய கல்வித் தகுதி பெறாமல் தன்னைப் பேராசிரியர் என்று பிறரை சொல்ல வைத்து பூரித்து போகிற இந்தப் பம்மாத்து பேர்வழிக்கு எந்த விஷயத்திலும் ஆழமான அறிவோ அக்கறையோ இல்லை என்பது இன்று புலம் பெயர்ந்த சூழலில் அம்பலப்பட்டு போன விடயம் என்றாலும் அங்கே மேடை கிடைத்தாலும் ஓடிப்போய் அதற்கேற்ற விதமாக தீவிர இடதுசாரி, புலி ஆதரவாளன், புலி எதிர்ப்பாளன், மாக்ஸிச விரோதி என்ற வேடங்கட்டி ஆடுவதற்கு மட்டும் ஒரு திறமை உண்டு. ‘அவைகாற்று கலைக்கழகத்தில்’ ஒட்டிக் கிடந்த போது மேடையில் கண்டு நடிக்க முடியாவிட்டாலும் வாழ்க்யையில் மிக நன்றாகவே நடித்து வருகிறார். இந்தப் புத்தகத்தைச் சாதாரணமானவர்கள் பார்க்க நேர்ந்தால் சிவசேகரமும் செந்திவேலும் மட்டும்தான் சாதியப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என்ற கருத்துத்தான் உருவாகும்  என்று அவர் கூறிய போது அவருடைய தண்ணீர் தொட்டி நிதானம் எப்படி இருந்தது என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கவனத்திருக்கக் கூடும். மிகக்கவனமாக எழுதப்பட்ட நூலை வாசிக்காமல் அதுபற்றி உளறுவதும் இரவல் வார்த்தைகளை சொந்த அறிவு மாதிரிப் பேசுவதும் அவரைச் சூழவுள்ள ஒரு சிலருக்கு சிலுசிலுப்பூட்டினாலும் நூலை வாசித்த எவருக்கும் இந்த வெறுங்குடத்தின் கலகலப்பு விளங்கிவிடும்.

பெரியார், அம்பேத்கார் போன்றோர் வெகுஜனப் போராட்டம் செய்யாதவர்கள் என்று சிவசேகரம் கூறுவதாக இன்னொரு புலுடா அந்த விதமான சாடையிற் கூட எதுவுமே எங்கும் சொல்லப்படாத போது, ஏன் இந்தப் பொய்? ஏனிந்த வன்மம் பிடித்த அயோக்கியத்தனம்?

சண்முகதாசன் பற்றிய சில குறிப்புகள் திருந்திய பதிப்பில் குறைக்கப்பட்டுள்ளதிற்கு குற்றங் காண்கிறார். அன்றைய சூழலில் நூலாசிரியர்கட்கு முக்கியமாக்கப் பட்டவை. இன்று விவரமான விவரணத்திற்கு அவசிய மற்றவை என்பதாலே சுருக்கப்பட்டன. இதில் நோக்கங் கண்டுபிடிப்பது போதாமல், தோழர் எஸ்.ரி. என. நாகரத்தினத்துக்கு முதற் பதிப்பு சமர்ப்பிக்கப்பட்டது. இப்பதிப்பு அதைச் செய்யவில்லை என்று வலிந்து நோக்கத் தேடுகிறார். முதற் பதிப்பு நூல்வடிவு பெற்ற போது தோழர் எஸ்.ரி.என். இறந்து சில நாட்களாகின. எனவே அவரது  நினைவு நிகழ்வொன்றில் அது அவருக்கு சமர்ப்பணமாக வெளியிடப்பட்டது. இம்முறை அவர் பற்றிய குறிப்புகள் நூலினுள் முன்னை விட விரிவாக உள்ளன, என்பது இந்த போலிப் பேராசிரியருக்கு எப்படி விளங்கும். வாசிக்காமலே விமர்சிக்கிற வல்லமை வீண்போகலாமா.

நித்தியானந்நனுக்கு வஞ்சகம் என்ற சொல்லுக்கு பொருள் தெரியாது போலிருக்கிறது.  அதனால் தான் எதையெதையோ எல்லாம் வஞ்சகம் என்கிறார் அவருடைய நடத்தையை அவரது இடதுசாரி வேடம், புலி வேடம், புலி  எதிர்ப்பு வேடம், தலித் வேடம் போன்ற பல வேடங்களினூடும் முதுகுக்குப் பின்னால் கதைக் காவித் திரிகிற சில்லரைப் புத்தியையும்  கண்டு கொண்டவர்கள் வஞ்சகத்தின் ஒரு ஒட்டுமொத்த வடிவமே அவர் என்று நன்றாக அறிவார்கள்.

இந்த விதமான கூட்டங்கள் நூல் பற்றிய ஒரு விரிவான ஆய்வையும் விளக்கத்தையும் தரவல்லன என நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் குறைந்தபட்ச நேர்மையுடன் நூலின் குறைநிறைகளை கூறக் கூடிய எவருமே லண்டன் ‘அறிமுக ஏற்பாட்டாளர்கட்கு’ கிடைக்கவில்லையா ? தூ!! வெட்கக்கேடு!!!

பின்குறிப்பு:
இந்தியாவில் சாதிவெறிக் கெதிராக யார் முன்னின்று போராடுகிறார்கள் என்பதைக் கொஞ்சம் விசாரித்தால் தமிழகத்தின் தலித்தியப் பிரமுகர்கள் பலரது முகமுடிகள் கழரும். ஐரோப்பியத் தலித்தியவாதிகள்  புலி எதிர்ப்பாளர்களாக இருக்கையில் அவர்கள் மெச்சும் தமிழகத் தலித்திய வாதிகள் என்.ஜி.ஓ. தலித்திய வாதிகள் ஓரிருவர் போக புலி ஆதரவாளர்களாகக் கூடத் தோன்றியும் கருணாநிதியுடன் கைகோர்த்தும் என்.ஜீ.ஓ பினாமிகளாகவும்  உலாவருகின்றனர் என்று விளங்கும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

13 Comments

 • viyajan
  viyajan

  the vellalar are the “Soothrar”.it means that they are low casts.the Tholkappiyam says Vellalars are the fourth(low casts)cast according to the Hindh varnachramam.sangam literature says by Pulavar kalamegam, the vellalars generated from “Saampan”( Sampan means parayan). do you need evidennce for above?

  -viyajan-

  Reply
 • viyajan
  viyajan

  இவை இங்ஙனமிருக்க வேளாளர்களை நான்காம் பிரிவினராக சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்காகிய காலமும் உண்டே” என்கிறது தொல்காப்பியம். இதன்பொருள், மணவினைச் சடங்குகள் இன்றி இருந்த நான்காம் வர்ணத்தவரான வேளாளர்களுக்கு மணவினைச் சடங்குகள் பின்னர் ஏற்படுத்தப்பட்டன என்பதாகும். மனுதர்மத்தில் சூத்திரர்களுக்கு திருமணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதை இத்துடன் ஒப்பிட்டுக் காணலாம். மேலும், கேரள நாயர்களும் தமிழக வெள்ளாளர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாக மானுட இனவியலாளர் கருதுகின்றனர். கேரள நாயர் பெண்களின் மண முறை அனைவரும் நன்கு அறிந்ததே. இவ்வாறு வேளாளர்களுக்கு மணவினைச் சடங்கு ஏற்படுத்தப்பட்டு இறுக்கமான குடும்ப அமைப்புக்குள் அவர்கள் கொண்டுவரப்பட்டதால் அவர்களும் குடி என்ற நிலைக்கு உயர்ந்தனர். இவ்வாறு குடி என்கிற நிலைக்கு மிகவும் பிற்காலத்தில் வந்ததாலேயே, உழுதுண்போரான வேளாளர்களை அடியொற்றி உழவர்களை ‘குடியானவன்’ என்று சொல்லுகின்ற வழக்கு நிலைபெற்றது.
  by pravhan from Tamilnaadu,india

  Reply
 • சேனன்
  சேனன்

  ஜரோப்பிய தலித்திய வாதிகள் என்று குறித்து ஒட்டுமொத்தமாக தலித்தியவாதிகளை தாக்கும் கட்டுரையாக இருக்கிறது இக்கட்டுரை. பெயர்களை குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை நேர்மையுடன் நேரடியாக வைத்திருக்க வேண்டும். அதை விட்டு எழுந்தமானத்தில் அம்பிட்டபடிக்கு தலித் எதிர்ப்பு செய்கிறது கட்டுரை. சாதியத்துக்கெதிரான போராட்டம் பற்றிய ஒற்பன் அறிவுமற்ற முறையில் எழுதப்பட்ட சிறு கட்டுரையாகவே இக்கட்டுரையை கருதவேண்டியுள்ளது. எவ்வித அரசியற் தெளிவுமற்ற –செயல் ஊக்கமற்ற- நேர்மையற்ற சிந்தனையோட்டம் இப்படியான பிழையான முடிவுகளுக்கு ஆக்களை தள்ளுவது இயல்பே.

  லன்டனில் ‘தலித்திய அறிவு மாற்றம் வட்டம்’ ஒவ்வொரு கிழமையும் உரையாடல்களை ஏற்பாடு செய்ய உள்ளது. கலந்துகொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.–சேனன்

  Reply
 • chandran.raja
  chandran.raja

  தோழர் சேனன் அவர்களே! இலங்கையை ஒரு காலப்பகுதியில் ஆண்ட நாயக்கர் பரம்பரை தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் தேனீர்கடை வைத்திருப்பதாகவும் ராஜஷ்தானை சேர்ந்த அரசபரம்பரை சில இளவரசர்கள் ரிக்சா இழுப்பதாகவும் பிரமணக் குடும்பத்தை சேர்ந்த சிலபெண்கள் வருமானத்திற்கு கோவிலோ தொழிலோ கிடைக்காத நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடவேண்டியுள்ள நிலையில்………

  இவர்களை நாம் சமுதாயத்தில் எந்தஅடுக்கில் சேர்த்துக்கொள்வது. தலித்திய அரசியல் வரையறையில் இவர்களைச் சேர்த்துக்கொள்ள முடியுமா? முடிந்தால் சிறிது விளக்கம் தரவும்.

  Reply
 • தாமிரா மீனாஷி
  தாமிரா மீனாஷி

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நித்தி விரிவுரையாளராக இருந்த போது, கலைப்பீடத்தில் இருந்த அனேகமான விரிவுரையாளர்களை விடவும் அதிகமான கல்வியறிவும், அனுபவ அறிவும் கொண்டவராக இருந்தார் என்பதை அக்காலத்தில் கலைப்பீடத்தில் கல்வி பயின்ற எவரும் மறுக்க மாட்டார்கள். பேராசிரியர் என்ற சொற்பதம் அவராக வலிந்து தனக்குச் சூட்டிக் கொண்டதல்ல. அத்துடன், பேராசிரியர் என்ற பதம் இலஙையில் பயன்படுத்தப்படும் முறைக்கும், தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் முறைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. தமிழ்நாட்டில் இளமாணி பட்டத்திற்கான கல்வியைப் போதிக்கும் கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர்கள் அனைவரும் பேராசிரியர் என்றே அழைக்கப் படுகின்றனர்.அவ்வகையில் பார்த்தால் நித்தி வகித்த பதவியின்படி அவரும் ஒரு பேராசிரியரே. சிரேஷ்ட விரிவுரையாளராக நியமிக்கப் படாததற்கு பல்கலைக்கழத்தின் நிர்வாகம் தான் காரணமே தவிர,நித்தியின் தகுதி காரணம் அல்ல. ஏ.ஜே. கனகரத்தினா ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராகவே இறுதிவரை இருந்தார். அதற்காக அவருக்கு அறிவு போதவில்லை என்று கொள்ளலாமா?

  Reply
 • நாவலன்
  நாவலன்

  கட்டுரையில்
  1. இலங்கையின் சாதியொழிப்புக்கான போராட்டங்கள் இந்திய நிலைமைகளிலிருந்து வேறுபடுவதாகவும்
  2. இந்தியாவில் தலித்தியப் போராட்டங்கள் இலங்கையில் பெற்ற வெற்றியைப் பெறவில்லை என்றும்.
  3. இதனால் இந்திய மாதிரியைப் பின்பற்றும் புலம்பெயர் தலித் ஆர்வலர்கள் விமர்சனத்திற்குட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்றும்.
  4. இந்திய தலித்தியப் போராட்டங்கள் வெற்றுச் சீர்திருத்தப் போராட்டங்களாக மாற்றமெடுத்து, மார்க்சியத்தை அதிலிருந்து அன்னியப்படுத்துகின்றது என்றும்.
  5. சிங்கள மக்கள் மத்தியில் சாதி ஒடுக்குமுறையின் வன்மை குறைந்ததற்கான வேறுபட்ட சமூகப் பொருளாதாரப் பின்னணிகள் அமைந்திருப்பதாயும்.
  போன்ற ஆழமான விவாதத்திற்குரிய விடயங்களை சம்புகன் ஒரே சிறு கட்டுரையில் குறித்துக்காட்ட முற்பட்டதில் கட்டுரை வலுவிழந்து போயுள்ளது. தவிர, நித்தியானந்தன் தொடர்பான விடயங்கள் தனிப்பட்ட தாக்குதல் போன்று தொனிக்கிறது. ஒருவரின் அரசியல் கருத்தை அவரது தனிமனித பலவீனங்களூடாக நிராகரித்தல் என்பது பலவீனமானதே.

  சம்புகன் புதியபூமியில் எழுதிய பலகட்டுரைகளின் ஆழத்தை இங்கு காணமுடியவில்லை!

  Reply
 • Nadchathiran chevinthian.
  Nadchathiran chevinthian.

  “ஜரோப்பிய தலித்திய வாதிகள் என்று குறித்து ஒட்டுமொத்தமாக தலித்தியவாதிகளை தாக்கும் கட்டுரையாக இருக்கிறது இக்கட்டுரை. பெயர்களை குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை நேர்மையுடன் நேரடியாக வைத்திருக்க வேண்டும். அதை விட்டு எழுந்தமானத்தில் அம்பிட்டபடிக்கு தலித் எதிர்ப்பு செய்கிறது கட்டுரை. சாதியத்துக்கெதிரான போராட்டம் பற்றிய ஒற்பன் அறிவுமற்ற முறையில் எழுதப்பட்ட சிறு கட்டுரையாகவே இக்கட்டுரையை கருதவேண்டியுள்ளது” -Senan

  I agree 100% with Senan. Sampuhan the writer wants to defend a certain Sivasekaram and offend a certain Nithiananthan at the cost of truth.Valid arguments and evidences are not used. Dr. Nithiananthan never claimed himself a Professor. Dr. Nithiananthan cannot be held responsible for others calling him a professor.

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  தத்துவங்களை மட்டும் வைத்துக் கொண்டு தங்கள் கைகளில் ஊத்தைபடாது ஆடிக்கொரு புத்தக வெளியீடு அமாவாசைக்கு மாநாடு செய்யும் புலம்பெயர் முன்னணிகளின் பின்னணிகள் யாவரும் அறிந்ததே.

  தத்துவங்கள் அற்ற நடைமுறையும் நடைமுறையற்ற தத்துவமும் பயன்தரப் போவதில்லை.

  இலங்கையில் சாதியப் போராட்டங்களை நடாத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் விலங்குகளை ஒடித்த பெருமை மார்க்ஸிய லெனினிய கட்சிகளுக்கு உரியது. அந்த பின்னணிகளில் இருந்து வந்தவர்களே ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ என்ற நூலை எழுதிய சி கா செந்திவேல் மற்றும் ந இரவீந்திரன். மேலும் இன்றும் அவர்கள் அந்த மக்களுடன் நின்று போராடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட முடியாது.

  ஆனால் இன்று புலம்பெயர் நாடுகளில் சாதியம் பற்றி பேசுபவர்களும், தலித்திய அறிவு மாற்றம் செய்பவர்களும், அநேகமானோர் சாதியப் போராட்டங்களை புத்தகங்களில் மட்டும் படித்தவர்கள். மேலும் அவர்கள் சார்ந்து இயங்குகின்ற அரசியலும் சந்தேகத்திற்கு உரியதே. கடந்த ஆண்டு பேராசிரியர் திஸ்ச விதாரணவிடம் தலித் முன்னணி மகஜர் ஒன்றைக் கையளித்தது. அதன் பின்னர் நடந்த உரையாடலில் அங்கு வந்திருந்த எ பி நிஸாம் காரியப்பர். ‘நல்ல காலம் ஜாதிக ஹெல உறுமயவினர் வரவில்லை. வந்திருந்தால் இன்னும் கொஞ்சகாலம் இதை வைத்து அரசியல் செய்திருப்பார்கள்’ என்ற வகையில் கருத்து வெளியிட்டார். அதுமட்டுமல்ல தலித் முன்னணியின் முக்கிய உறுப்பினர் இலங்கை அரசுசார்பான கட்சிகளுடன் இணைந்தது என்பனவும் அண்மைய வரலாறு. இந்த பின்னணிகளில் இருந்தே புலம்பெயர் தலித் அரசியல் பார்க்கப்படுகிறது அது தவிர்க்கவும் முடியாது.

  காரைநகர் நலன்புரிச் சங்கத்தில் ஒருவர் அவரது சாதி அடையாளத்தைக் கூறி ஒதுக்கப்பட்டது தொடர்பாக நண்பர் சேனன் கடைசியாக லண்டனில் நடைபெற்ற தலித் மாநாட்டில் ஒரு விடயத்தைக் கொண்டு வந்தார். தலித்துகளுக்காக போராடுபவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கூட்டிய மாநாட்டில் தலித் ஒடுக்குமுறைபற்றி பேச அவர்கள் தயாராக இருக்கவில்லை. அதனைக் கதைப்பதற்கு இது இடமல்ல இது நேரமல்ல என்ற வகையில் தட்டிக் கழிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் இன்று வரையும் தலித் முன்னணி அது பற்றி எவ்வித அக்கறையும் எடுக்கவில்லை. தலித் முன்னணி வெளியிட்ட முதலாவது அறிக்கை கூட தலித் மக்களுக்காக வெளியிடப்படவில்லை. தனிநபர் முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளவே அவ்வறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. நிற்க.

  இதில் மிகத் துரதிஸ்ட்ம் என்னவென்றால் இலங்கையில் சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் எவ்வித தொடர்பு மற்றவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு அந்த மக்களுடன் வாழ்ந்து அந்த மக்களுடன் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு தலித்தியத்தை ஏற்றுமதி செய்ய முற்படுகின்றனர். இங்கு இவர்களுக்கு அந்த மக்கள் சார்ந்த நலன் என்பதிலும் பார்க்க தாங்கள் சார்ந்த தங்கள் கட்சி சார்ந்த நலன்களே முன்வைக்கப்படுகிறது. அதற்கு இலங்கையில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களைப் பயன்படுத்த முற்படுகிறார்கள்.

  கன்பொல்லை மக்களுக்கும் இலங்கையில் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் யார் உண்மையான போராளிகள் என்பது தெளிவாகத் தெரியும். சம்புகன் போன்றவர்களின் எழுத்தக்கள் அந்த மக்களை நோக்கி அமைந்ததாக இருக்கட்டும். நேரம் இருந்தால் இங்குள்ள பகுதிநேர தத்துவவித்தகர்களுக்கு கொஞ்சம் ஆழமாகவும் எழுதவும். ஏனென்றால் அவர்களுக்கு மக்களிடம் கற்றுக்கொள்ளத் தெரியாது அல்லது வாய்ப்பில்லை. அதனால் நீங்கள் எழுதுவது அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

  த ஜெயபாலன்.

  Reply
 • sinnarajah
  sinnarajah

  /Dr. Nithiananthan never claimed himself a Professor. Dr. Nithiananthan cannot be held responsible for others calling him a professor/.
  எனக்கு மண்டையே வெடிக்கும் நிலை.திரு நித்தியாநந்தன் முனைவர் பட்டம் பெற்றாரா? எங்கே,எப்போது? எந்தப் பல்கலைக்கழகத்தில்- எந்தத் துறைசார்ந்து ஆய்வு செய்தார்? அவரது ஆராட்சிக்கட்டுரையை எங்கே பெறமுடியும்?

  நட்சத்திரன் செவ்விந்தியன் பதில் தாருங்கோ.

  அன்புடன்
  சின்னராசா

  Reply
 • ராபின் மெய்யன்
  ராபின் மெய்யன்

  ஜெயபாலனது பதிலீட்டமாக அமைந்த கட்டுரை உண்மையான அக்கறை சார்ந்து எழுதப்பட்டுள்ளது.தொடர்ந்து அவ்வாறான கட்டுரைகளை அவரும் எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். உயர் சாதியை எதிரிகளாகப் பாவித்துத்தான் இலங்கைத் தமிழரிடையே சாதியத்தை ஒழிக்க முடியுமா? சாதிய அடக்குமுறையை இல்லாதொழிக்க மேல் சாதியினரின் ஆதரவு அவசியமில்லையா?

  Reply
 • viyajan
  viyajan

  on January 15, 2008 8:53 pm சாதியை கைவிட்டு மனித உரிமையை மதித்து தமிழினத்தின் நன்மைகளை முன்னெடுக்காத எந்த போராட்டமும் தோல்வியில்தான் முடியும்.– துரை

  Note1:உண்மை உண்மை!!!
  Note.2 above statement copied by me from January 15.2008. its belonged to Mr.Thurai.(துரை)

  Reply
 • Hasan Ali
  Hasan Ali

  நித்தியானந்தனை மட்டுமல்ல சரவணன் மீது மேற்கொண்டதும் தனிப்பட்ட தாக்குதலே.

  சரவணனின் கட்டுரைகளை நான் வாசித்திருக்கிறேன். அவரிடம் ரோகண விஜேவீர தொடர்பான விமர்சனம் இருந்ததே தவிர ஆராதனையை அவர் தனது கட்டுரைகளில் வெளிப்படுத்தியதாக நான் காணவில்லை. சரவணனுக்கு ஜேவிபியில் இருந்து அதனுடைய இனப்பிரச்ச்னை தொடர்பான கொள்கைகளால் முரண்பட்டு வெளியேறியவர்களுடன் தொடர்பிருந்ததாகவே நான் அறிந்திருக்கிறேன். அந்தவகையில் சரவணைனைத் தாக்க எடுத்த ஒரு எடுகோளாகவே அதனைக் காணமுடிகின்றது. மறுபுற்தில் நவசமசமாஜக்கட்சியின் ஆதரவாளராகவும் இருந்து வந்தவர் எனவும் விக்கிரமபாகு கருணாரத்ன புலிகளின் ஆதரவாளர் என்று சொல்வதனூடாக சரவணனை புலிகளின் ஆதரவாளர் என்று நிறுவுவது கட்டுரையாளருக்கு அவசியமாகப்படுகிறது. கட்டுரையாளர் இதற்காக இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டியதில்லை. மிக வெளிப்படையாகத் தொரிகிற விடயம் என்னவென்றால் சரவணன் ஜேவிபியின் இனப்பிரச்சினை தொடர்பான கொள்கைகளால் அதனுடன் முரண்பட்டு வெளியெறியவர்களுடன் தொடர்பைக் கொண்டிருந்த சரவணனன் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை ஏற்கும் நவசமசமாஜக் கட்சியை ஏற்றதில் ஆதாத்ததில் என்ன தவறிருக்க முடியும். சரவணனுடைய அரசியல் ரீதியான அபிப்பிராயத்தை கொச்சைப்படுத்தித் தான் தன்னை நிறுவ வேண்டிய நிலை கட்டுரையாளருக்கு.
  மறுபுறத்தில் சரவணனுடைய தலித்தியக் கொள்கை குறித்த அபிப்பிராயத்தில் எனக்கும் உடன்பாடு இருந்ததில்லை. ஆனால் ஒரு தலித்தினுடைய அபிப்பிராயம் என்றளவில் அதை மதிப்பதற்கு நாம் பழக்கிக் கொள்ள வேண்டும். மதிப்பது என்பது விமர்சனம் இல்லாமல் ஏற்றுக் கொள்வது என்பதல்ல.

  தமிழ்நாட்டில் தலித்திய இயக்கங்கள் சாதிச்சங்கங்களாகச் சுருங்கிப் போய் இருப்பதும் வாக்கு வங்கிக்கான ஒரு வழிமுறையாக தலித்தியம் இன்று பயன்படுவதும் கண்கூடு. புலம் பெயர்ந்த நாட்டில் புலிகளை எதிர்க்கும் யாழ். உயர் சைவ வேளாளருடைய அரசியல் இருப்புக்கான ஒரு ஆயுதமாக தலித்தியம் பயன்படுகிறது என்பது தான் உண்மை. அங்கு தலித்தியம் பேசும் யார் தலித்தாக இருக்கிறார் என்பதை யாராவது நிறுவ முடியுமா? அந்த வகையில் சரவணன் தார்மீக உரிமையைக் கொண்டவராக இருக்கிறார். எவ்வளவு குறைபாடுகள் அவரது பார்வையில் இருந்த போதும்.

  சரவணனைத் தாக்க கட்டுரையாளர் பயன்படுத்திய இன்னொரு உபாயம் பொதுப்புத்தி சார்ந்த மலினமான ஆயுதம். என்ஜிஓ பத்திரிகையின் குளு குளு அறை என்கிற படிமம். இதற்கும் தமிழ்நாட்டுத் தினசாhகளில் பாலியல் தொழிலாளர் கைது செய்யப்படும் சந்தா;ப்பங்களில் ‘அழகிகள் கைது’ என்று எழுதி உருவாக்கும் படிமத்துக்குமிடையே அதிக வேறுபாடுகளில்லை. ஒரு இடது சாரி எழுத்தாளரின் எழுத்து இவ்வளவு பலவீனமாக இருப்பது தான் இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் தோல்வியின் அடிப்படை. இந்த இடத்தில் இன்னொன்றையும் சுட்டிக்காட்டுவது பொருந்தும். அதாவது தமிழ்நாட்டில் தலித்திய இயக்கங்கள் இன்று சாதிச்சங்கங்களாகச் சுருங்கியது போல இலங்கையில் இடதுசாரி இயக்கங்கள் வெறுமனே சாதி எதிர்ப்புப் போராட்ட அமைப்புக்களாகச் சுருங்கி விட்டதும் வரலாறு. இதனால் தான் அவை பேரினவாத அரசுகளுடன் தமிழரசுக்கட்சி போல கூட்டுச் சேர முடியுமாக இருந்தது. இருக்கிறது. இது குறித்த இலங்கையின் இடதுசாரி இயக்கங்களின் சுயவிமர்சனம் என்ன? இன்றுவரை இனப்பிரச்சினை குறித்த அவர்களுடைய பார்வை தான் என்ன?

  இறுதியாக இன்னொரு விடயத்தையும் மேர்ஜ் என்ஜிஓ குளு குளு அறை என்பது பற்றியும் குறிப்பிட வேண்டும். முதலிலேயே சரிநிகரின் எல்லாக் கருத்துக்களுடனும் எனக்கு உடன்பாடில்லாவிடினும் இலங்கையில் வெளிவந்த பத்திரிகைகளுள் சரிநிகர் கருத்துத் தளத்தில் ஏற்படுத்திய அதிர்வுகள் மிக முக்கியமானவை. இலங்கைப் பத்திரிகைச் சூழலில் ஒரு புதிய போக்கிற்கும் அது வழிவகுத்தது. அது நடாத்திய விவாதங்கள் பயன்மிக்கவை. ஆனால்>மேர்ஜ் என்ற நிறுவனத்தில் சரிநிகர்ன் இடம் என்பது இலங்கையில் தமிழா;களின் நிலை போலத் தான் என்று சொல்வதில் ஒன்றும் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை. மேர்ஜ் நிறுவனத்தின் கணக்காளராக இருந்தவர் தொழில்முறையில்;என்னுடைய நண்பர். அவரைச் சந்திப்பதற்காக நான் பலமுறை அங்கு சென்றிருக்கிறேன். மேர்ஜ் நிறுவனத்திலேயே குளிரூட்டப்பட்டிருந்தது கணணிகள் வைக்கும் அறை தான். மற்றப்படி குளிரூட்டப்பட்ட அறை எதுவும் அங்கிருக்கவில்லை. அடுத்தது என்னுடைய நண்பரான அந்தக் கணக்காளரின் தகவலின்படி சரிநிகரகருக்கு என புறம்பாக கணக்கோ நிதி;க்கையாளுகைக்கான அதிகாரமோ இருக்கவில்லை. மேர்ஜ் நிறுவனத்திடமே அது இருந்தது. சரிநிகர் ஊழியர்களுக்கு மாதாந்தப் படியே வழங்கப்பட்டு வந்தது. அவர்கள் தமது சம்பள உயர்வுக்காக மேர்ஜ் நிறுவனத்திற்குள்ளேயே போராட வேண்டியிருந்தது. மேர்ஜ்ஜின் மற்றைய பிhவுகளில் வேலை செய்தவர்களுடைய சம்பளத்தை விட இவர்களுடைய சம்பளம் குறைவானது என்பதையும் நண்பர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

  இவற்றை வைத்துப் பார்க்கும் போது சம்புகனின் விமர்சனம் மிகப்பவீமானதாக இருக்கிறது இலங்கையின் இடதுசாரிகளைப் போல என்ற உண்மை முகத்திலறைகிறது.

  இங்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் புதிய ஜனநாயகக் கட்சியான முன்னாள் இடதுசாரிக்கட்சியினரிடம் பாலசுப்ரமணியம் என்பவர் பகிரங்கமாகவே ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். என்ஜிஓவிடம் பணம் வாங்கினார்கள் என்று மற்றவர்களைத் திட்டுகிறீர்களே உங்களுடைய கட்சிக்கும் உங்களுடைய புத்தகசாலைக்கும் சீனாவிடமிருந்து பணம் கிடைத்து வந்தது எனக்கு நன்றாகத் தொpயும். எந்த நோக்கமுமில்லாமல் இல்லாமல் அவர்கள் பணம் தரவில்லை. அதேபோல இப்போது என்ஜிஓக்கள் பணம் வழங்குகின்றன. அவ்வளவு தான். சீனா பணம் தரவில்லை என்பதை உங்களால்; மறுக்கமுடியுமா எனப் பகிரங்கமாகவே கேட்டிருந்தார். அங்கிருந்த பேராசிரியர் சிவசேகரம் உட்பட புதிய ஜனநாயகக் கட்சிப் பிரமுகர்கள் எவரும் இந்தப் பகிரங்கமான கேள்விக்கு பதிலெதையும் தரவில்லை. அவர்கள் பேச முடியாது. உண்மை அப்படி.

  Reply
 • n.s.george
  n.s.george

  dear sir,
  i think the argument will continue forever but cast system is falling and its disappearing within the tamil community in europe.even in jaffna there is no sign of cast system there.minority become majority so that no such a cast system in home land.

  maybe 30 years ago there is but now no more.about 2,500 thousand vellalars were there now ony few left all part of jaffna penisula.

  its like western world obama is the first black precident we still taik about racial issues.

  world changing and tamils are changing.

  george nicholas

  Reply