இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதுள்ளதுடன் சமூகப்பரவல் தொடர்பான அபாயமுமத் ஏற்பட்டுள்ளது.
திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3395 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பெண் சுகயீனம் காரணமாக கடந்த தினம் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அவர் குணமாகி வைத்தியசாலையில் இருந்து வௌியேறும் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கம்பஹா வைத்தியசாலையின் பணிபுரியும் 15 பேரும் மற்றும் குறித்த பெண் தொழில் புரியும் தனியார் நிறுவனத்தின் சுமார் 40 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து அவர் பணிபுரிந்த மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 600 பேரும், திவுலப்பிட்டியவில் அவருடன் நெருக்கமாகப் பழகிய 150 பேரும் வீடுகளிலில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பெண்ணின் 16 வயது மகளுக்கும் இன்று மாலை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தத் தகவலை கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிததுள்ளார்.
அதே நேரம் கம்பஹா மாவட்டம், மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஆடைத் தொழிற்சாலையில் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் ஒருவர் கடந்த 30ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார். அவர் கடந்த 4 நாட்களில் பழகியவர்கள் தொடர்பில் தகவல் பெறப்பட்டு அவர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் மற்றைய பெண் இன்று ஞாயிற்றுக்கிழமையே வீடு திரும்பியுள்ளார். அவரது குடும்பத்தினரும் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவருடன் தொடர்புடையவர்களும் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.