ஈழத்தமிழர்கள் பிச்சைக்காரர்களா? எம்.பி. சிவாஜிலிங்கம்

Sivajilingam M K_TNA MPஇலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்து வரும் திருமாவளவன் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்யும் இந்திய அரசு மீதும் ஆவேசப்பட்டுள்ளார்.

’’திருமாவளவனின் உடல்நிலை கருதி அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திருமாவளவனின் நலம் ஈழத்தமிழர்களுக்கு முக்கியம். அவர்கள் அவர் மீது அவ்வளவு மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ் ஈழத்தில் இருந்து தலைவர்கள் வருவார்கள். அவர்களும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்துவார்கள். திருமாவளவன் அவர்களது அந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.

ஈழப்பிரச்சனையைப் பொறுத்தவரையில் மத்திய, மாநில அரசைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அப்படி பேசினால் கொடூரமான பேச்சாக இருக்கும். அதனால் நான் பேச விரும்பவில்லை. ஆனாலும் ஒன்றை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சிவசங்கர் மேனன் பேசுகையில் இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய அரசு ஒரு கோடியே எழுபது லட்சம் நிவாரண நிதி வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஈழமக்கள் நிவாரணத்தை மட்டுமே எதிர்பார்த்து நிற்கும் பிச்சைக்காரர்களா என்ன. சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காக முதல்வர் கருணாநிதி தன் பணத்தில் ஒரு கோடி கொடுக்கிறார். அப்படியிருக்க ஒரு இந்திய அரசு வெறூம் ஒரு கோடி எழுபது லட்சம் கொடுப்பதாக சொல்லியிருப்பதை என்னவென்று சொல்வது’’.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • hello
    hello

    இது வல்வெட்டிதுறை கிராமத்து அரசியல்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இந்திய அரசு இருக்கட்டும் கூத்தமைப்பு எம்பியாக நீர் இருந்து வன்னி மக்களுக்கு என்ன செய்தார்?? இன்று இலங்கைத் தமிழ் மக்களின் இந்த நிலைமைக்குக் காரணம் புலிகளும் கூத்தமைப்புக் கோமாளிகளும் தானே !!!!!!

    Reply
  • accu
    accu

    சிவாஜிலிங்கம் // ஈழமக்கள் நிவாரணத்தை மட்டுமே எதிர்பார்த்து நிற்கும் பிச்சைக்காரர்களா என்ன. சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காக முதல்வர் கருணாநிதி தன் பணத்தில் ஒரு கோடி கொடுக்கிறார். அப்படியிருக்க ஒரு இந்திய அரசு வெறூம் ஒரு கோடி எழுபது லட்சம் கொடுப்பதாக சொல்லியிருப்பதை என்னவென்று சொல்வது’’.//

    விளங்கவில்லையே! பிச்சை வேண்டாம் என்கிறாரா அல்லது காணாதென்கிறாரா? என்னவோ உவரின் வாழ்க்கையே புலிகள் போட்ட பிச்சைதானே.

    Reply
  • palli
    palli

    இந்த பேச்சுதான் ஈழமக்களை பிச்சைகாரரை விட மோசமான நிலைக்கு கொண்டு வந்தது. திருமா இருக்கும் உண்ணா விரதம் கூட இந்த தரக்குறவான பேச்சால் போலியாகி விடும். அரசியல் செய்ய பலவழி உண்டு அதில் ஏதாவது ஒன்றை பார்த்து செய்வதைவிட்டு இது என்ன உயிருடன் விளையாட்டு.

    //மத்திய, மாநில அரசைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அப்படி பேசினால் கொடூரமான பேச்சாக இருக்கும். //
    இப்பபோ மட்டும் என்ன அமைதி பேச்சா நடக்குது.

    //சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காக முதல்வர் கருணாநிதி தன் பணத்தில் ஒரு கோடி கொடுக்கிறார். அப்படியிருக்க ஒரு இந்திய அரசு வெறூம் ஒரு கோடி எழுபது லட்சம் கொடுப்பதாக //
    இந்த கொடுமையை எங்கு போய் சொல்ல? நாம் பிச்சைகார்ரரா என கேட்டுவிட்டு அது என்ன குறைத்து கொடுப்பது என வினாவினால் இதை தரம் கெட்ட பேச்சு என்பதில் ஏதும் தவறுஉண்டா??
    பல்லி.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பிச்சைகார்கள் இல்லைத்தான் ஜனநாயக மறுத்தோடித்தனத்தாலும் வன்முறையாலும் இன்னொரு இனத்தை வாழவிடாமல் பண்ணியதாலும் அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பிச்சைகாரர்கள் ஆக்கிவிட்டீர்கள். புலிகளின் அரசியலோ துணைக்குழுவான கூட்டமைபின் அரசியலோ இனிதமிழ் மக்களுக்கு என்னொன்றும் தேவையில்லை. சுயதீனமான வழியில் அவர்கள் தங்கள் போராட்டத்தை முன்டெடுப்பார்கள்.

    Reply
  • thurai
    thurai

    வெளிநாடுகளில் வேலைகளின்றி புலிகளிற்கு பணம் சேர்ப்போரிடம் உள்ள சொத்துக்களையும், பணங்களையும் பற்ரி தமிழகமோ, இந்திய அரசோ அறிந்திருப்பதற்கு எவ்வித காரணமுமில்லை. முதலில் ஏழைகளின் படங்களைக்காட்டி தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்து உலகத்தமிழரை
    ஏமாத்தும், புலியின் ஆதரவாளரைப் பார்த்து அறிவுரை கூறவும்.

    துரை

    Reply
  • Sinna Siththar
    Sinna Siththar

    MP Sivagilingam’s comments raises several questions.

    1. LTTE and its supporters continued to beg for ceasefire.

    2. LTTE media continue to beg for support for its leaders.

    3. LTTE media and its supporters continue to beg for cash contribution for its war efforts.

    4. LTTE media and its TNA MP’s continue to raise the plight of the people to beg for ceasefire. This is like beggers displaying their open wounds to attract charity from passers by. The honourable course of acttion for these MPs would be to tell LTTE to release all Vanni people they are holding in Mullaitive to UN bodies.

    5. Tamil supporters of LTTE are successful in persuading Thirumavalavan to fast on to death than they themselve would not fast on to death. This is bit odd given that their claim of having the support of most Tamils.

    6. All TNA MP’s must join Thirumavalavan to Fast on to Death. Will they do it as a sacrifies to their fellow Tamils caught up in Vanni?

    7. Would the MP tell LTTE and its leaders to stop begging funds. If he does then his statement above has some merit.

    8. Would all these TNA MPs go back to their respective electrorats to be with their voters? When did these MPs meet with their voters last?

    9. Were they elected to serve the people or on permanant tour of Asia Europe and Americas?

    I have more questions for the TNA MPs. I am too tired to ask them the obvious.

    Reply
  • hello
    hello

    இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ் ஈழத்தில் இருந்து தலைவர்கள் வருவார்கள். அவர்களும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்துவார்கள். what is this.

    Reply
  • kamal
    kamal

    பழரசம் கொடுத்து போராட்டத்தை கைவிட்டுவிட்டார்கள் எங்கே இருக்கிறீர்கள் இது தெரிந்துதானே இதை தொடங்கினார்கள். இந்திய தமிழ் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் கில்லாடிகள் என்பது உங்களுக்கு தெரியாததா என்ன?

    Reply
  • PONNAR
    PONNAR

    ஜரோப்பாவில் சேர்க்கப்பட்ட காசுகள் இன்னும் வன்னிக்கு போய் சேரவில்லையாம் ஆகவே மீசைல் வாங்க முடியாதாம் அதனாலே அரசின் கை ஓங்ககிறதாம் புளி ஆதரவாளர்களே உசாரக இருந்து பணத்தை அள்ளி வீசுங்கள்.

    Reply
  • Raw Agent
    Raw Agent

    ரிஎன்னேயினரக்கு இந்தியா சொல்லிப் போட்டுதாம், புலிகள் இல்லாமல் போன பிறகு இலங்கை இந்திய ஒப்பந்தம் போல ஒரு ஒப்பந்தத்தை தமிழர்களும் சிங்களவர்களும் ஏற்ப்படுத்தி இலங்கையில் தொடர்ந்து அமைதி நிலவ ஏற்ப்பாடு செய்யப்படும் என்று. இதற்கு புலிகளைத் தவிர மற்ற எல்லா தரப்பினரும் உடன்பட்டுள்ளனராம் – நம்புங்கள் இது நடக்கும்- இதுதான் கூட்டணிக்கும் கரணாநிதிக்கும் இந்தியா கொடுத்த வாக்குறுதி- இதைவிட்டுவிட்டு அதுஇது எண்டுஎல்லாம் வீணாக நேரத்தை வீணடிக்காதீர்கள் – நன்றி.

    Reply