பிரித்தானியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கழிவுக்கொள்கலன்களால் ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீட்டுத்தொகை 1.69 பில்லியன் ரூபாய் !

பிரித்தானியாவில் இருந்து 263 கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை இறக்குமதி செய்வதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புக்கு இலங்கை அரசாங்கம் 1.69 பில்லியன் ரூபாய் இழப்பீட்டு கோரியுள்ளது.

Basel சாசனத்தின் கீழ் இலங்கை வழக்கு தாக்கல் செய்துள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் பிரித்தானியாவில் இருந்து 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டன.

130 கொள்கலன்கள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலும், 133 கொள்கலன்ள் கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியிலும் வைக்கப்பட்டன.

21 கொள்கலன்கள் இதுவரை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முடிந்ததைத் தொடர்ந்து மீதமுள்ள கொள்கலன்கள் திருப்பியனுப்ப ஏற்பாடு  செய்யப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *