கொலை அச்சுறுத்தல் தனக்கு அதிகரித்திருப்பதாகவும் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார். இது தொடர்பில் கொழும்பில் வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது; சிரச ஊடகம் மீதான தாக்குதல் மற்றும் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையானது உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்ற ஊடகங்களை மௌனிக்கச் செய்யுமுகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்விரு தாக்குதலையும் நான் கண்டிக்கின்றேன். தற்போதுள்ள சூழ்நிலையில் எனக்கு கொலை அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் என்னை பாதுகாக்கும் பொறுப்பு பொலிஸ் திணைக்களத்துக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் உள்ளது.எனவே என பாதுகாப்பினை மேலும் அதிகரிக்குமாறு கோரி பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ணவுக்கு கடிதம் எழுதவுள்ளேன். நாடு இன்று பாரிய நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலை உருவாவதற்கு அமெரிக்காவில் பிரஜாவுரிமை மற்றும் கிரின்காட் உள்ளவர்களே காரணமாகவுள்ளனர். எனவே இதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி மனுவொன்றை கையளித்துள்ளோம். இதனை அமெரிக்க அரசின் புதிய இராஜாங்க செயலாளரிடம் 20 ஆம் திகதி கையளிக்கவுள்ளோம். இதற்கான நேரத்தை ஒதுக்கித்தரும்படி தாம் அவரிடம் கேட்கவுள்ளதாகவும் தெரிவித்தார