முன்னாள் இராணுவத்தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சிறுவர் படையணியின் தளபதியென அண்மையில் கருத்து ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
இந் நிலையில் இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு பதில் வழங்கிய தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் “இலங்கை அரசாங்கத்தின் ஆட்சியாளர்களை சர்வதேச நீதிமன்றில் முற்படுத்துவதற்கும் அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் ஒன்றிணையவேண்டும் ” என குறிப்பிட்டுள்ளார்.