“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம் படகொன்றின் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ஆதரவு வழங்கினார்”என உளவுத்துறைத் தெரிவித்ததாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தற்போது வசித்து வரும் ஜெனரல் சேனநாயக்க, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இணைய காணொளி வாயிலாக ஜனாதிபதி விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளித்திருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மகேஷ் சேனநாயக்க மேலும் கூறியுள்ளதாவது,“யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படைத் தளபதியாக பணியாற்றிய காலப்பகுதியில் சஹரான் பற்றித் தெரிந்து கொண்டேன்.
சஹ்ரான் பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறியும் திறன் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு இருக்கின்றது. ஆனால் இது குறித்து விசாரணைகளை நடத்திய நிறுவனங்கள், இராணுவ புலனாய்வு பிரிவின் ஆதரவைப் பெறவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.